கேளுநீ மூலத்தில் குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி நீளுநீ ரேசித்துப் பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும் வாளுநீ நந்திவந்து வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும் நாளுநீ வாசிவைத்து மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே |