உப்பான கல்லுப்பு வெடியுப்புச்சீனம் உத்தமனே துரிசியொடு சூடனிந்து விப்பான முன்மருந்தோ டொக்கப்போட்டு விரவியரையெட்டுநாள் கிழங்குசாற்றில் அப்பாநீதெல்லுபோல் வில்லைபண்ணி பாத்தியாம் பூப்புடத்தில் தயிலம்வாங்கி செப்பான தீயிட்டு துரிசுநீரிட்டு சீரானசரக்குதனில் சருக்குபோடே |