சித்தியாந் தேவருக்கும் ஐந்துபூதம் ஜெகத்திலுள்ள சித்தருக்கும் ஐந்துபூதம் முத்தியாம் ஊர்வனமும் ஐந்துபூதம் உயர்ந்துநின்ற விருட்சமெல்லாம் ஐந்துபூதம் புத்தியாம் பாம்பினமும் ஐந்துபூதம் போக்கான ஐந்தினாலெல்லாமாச்சு பத்தியாம் வாதத்தில் பஞ்சபட்சி பாஷாணவைப்புதனைப் பாடினேனே |