அரைத்திட்டுப் பொடிபண்ணி மேருக்கேற்றி ஆறவிட்டுப் பனிரண்டுசாமந் தீயைப்போடு வரைத்திட்டப் பதங்கமதுயிறுகியேறி வகையான பஞ்சபட்சி பாஷாணமாகும் நரைத்திட்டுப் போகாதுமெழுகுபண்ணிக்கொண்டால் நவலோகமாயிரத்துக்கோடும்பாரு புரைத்திட்டு வீசமுடை பாலிலுண்ணு பொலிவான சட்டைகக்கி வாலையாமே |