| வாங்கியதோர் தொட்டின்மேற் பொற்றொட்டியாச்சு மருவியே மேலோடிப் பதங்கித்துநின்றால் ஓங்கியதோர் ரத்தமென்ற பாஷாணநாமம் உற்றஅடி நின்றதுவும் அஞ்சனமுமாச்சு ஏங்கியதோர் நடுவில்நின்றால் கற்பரியுமாச்சு ஏககுனிமுன் நிற்கில் சரக்கண்டமாச்சு தாங்கியதோர் இத்தனையும் ஆயிசொல்லச் சாதகமாடீநுச் சித்தரெல்லாம் சமைத்திட்டாரே |