திடமான நூல்தன்னில் செப்பினது சொல்லாடீநு தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம் குடமான கோடரியொடு சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள் தடமான லவனமொடு சத்தும்செம்பு தனியகந்த குளிகையொடு செந்நீராகும் கடமான திருகலமும் இனக்கூட்டந்தான் கடிதானமூலிமகா அவுஷதந்தானே |