Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 8870974887 WhatsApp : 8870974887 Email id : vs2008w7@gmail.com
1. எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்: கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால். கடனிலேயே வாழ வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை கூடவே இருக்கும் எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் வறுமையில் வாழ நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். விபத்துக்கள் நேரிடும்.
2. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்: கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
3. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்: உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும். மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
4. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்: தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
5. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்: பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
6. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்: அற்ப ஆயுள்-(sub-sub test onlty) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
7. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்: பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
8. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு: மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும். எட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்
9. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்: பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும். இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
10. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்: ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும். இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும். எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்: மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான். எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.
12. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்: தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள். ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும். சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான். எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்
நமது இணையதளத்தில் பயன் உள்ள பகுதிகளுக்கு இணைப்பு பார்க்க-Click Here
ஜனனஜாதக பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க
திருமணப்பொருத்தம் பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க
ஜாமக்கோள் சாப்ட்வேர் பார்க்க
ஹிப்ரு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க
பெயர் உச்சரிப்பு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க
ஜோதிட அகராதி சாப்ட்வேர் பார்க்க
ஜாமக்கோள் சூட்சமங்கள் பார்க்க
உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க
ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில்..
எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகத்தில் எப்படி..
திருமணப்பொருத்தம் ஒரு வினாடியில் பார்க்க
இந்த நொடியில் ஜாமகிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் பார்க்க
தடை-தாமதத் திருமணம்..
திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி..


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/8/2024 5:35:08 AM
Psssrf ஜோதிட சாப்ட்வேரில். ஜோதிடர் முகவரி பதிவு செய்து. பிரிண்ட் செய்யும் முறை.
ஜாதகம் செல்போன் வழியாக பார்க்க புதிய APP Download செய்ய click here
PSSSRF ASTRO APP எப்படி பயன்படுத்துவது? VIDEO புதிய நபர் எப்படி பதிவு செய்வது. திருமண பொருத்தம், ஜாதகம் 1 PAGE கணிப்பது பார்ப்பது PDF,IMAGE- ஆக பதிவு செய்வது. பிரிண்ட் செய்வது, WHATSAPP... ANY SOCIAL MEDIA SHARE செய்வது
psssrf ஒரு பக்க ஜாதகம், one page horoscope ஒரு பக்க ஜாதகம் Backround color மாற்றுவது. ஒரு பக்க ஜாதகம் Image save செய்து. share to Social Media