|
பங்குனித் திங்கள் பெண்களால் கடைப்படிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாக கண்ணகை அம்மன் ஆலயங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப்பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் எல்லா செல்வமும் பெற்று வாழ்வர்.
|