ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் |
ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.
1 மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
2 ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
ஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்: பெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை.
ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும். உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில் பிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு நிகராகச் செயல்படுபவர்.
யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள் மிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை உடையவர்களாக இருப்பார்கள். சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும். சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும் சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும். சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும் |