Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர். 25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர். 26. காசிபர் - ருத்ரகிரி 27. வரதர் - தென்மலை 28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர். 29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில் 30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம். 32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி. 33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர். 34. கமல முனி - ஆரூர் 35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம். 36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர். 37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள். 38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு. 39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி. 40. பட்டினத்தார் - திருவொற்றியூர். 41. வள்ளலார் - வடலூர். 42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி. 43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர். 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம் 45. ராகவேந்திரர் - மந்திராலயம். 46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம். 47. குமரகுருபரர் - காசி. 48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு. 49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள். 50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி. 51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம். 52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம். 53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா. 54. யுக்தேஸ்வரர் - பூரி. 55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி. 58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி. 59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி. 60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம். 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம். 62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல். 63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி. 64. இராமதேவர் - நாகப்பட்டிணம். 65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை. 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். 67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. 68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி. 69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது. 70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு. 71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி. 72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி. 73. கம்பர் - நாட்டரசன் கோட்டை. 74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம். 75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம். 76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. 77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம். 78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை. 79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது. 80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே. 81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம். 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது. 83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு. 85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது. 86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில். 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல். 88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை. 89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது. 90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி. 91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில். 92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை. 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை. 94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர். 95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர். 96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில். 97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர். 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி. 99. வன்மீக நாதர் - எட்டிக்குடி. 100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார். 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. 102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை. 103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை. 104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர். 105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம். 106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை) 107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி. 108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம். பதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி : ஆதி காலத்திலே தில்லை திருமூலர் அழகுமலை இராமதேவர் அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர் கமலமுனி ஆரூர் சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார் சுந்தரானந்தர் கூடல் சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற் றாள் காசி நந்திதேவர் ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி பழனி மலை போகநாதர் திருப்பரங்குன்றமதில் மச்சமுனி பதஞ்சலி இராமேசுவரம் சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர் கோரக்கர் மாயூரங்குதம்பர் திருவருணையோர் இடைக்காட சமாதியிற் சேர்ந்தனர் எமைக் காக்கவே. -இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று. மதுரை-அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது. கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான 1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர், 2. சதுர்முக சுரேஸ்வர சித்தர், 3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர் 4. ஸ்கந்த பதுமபலாதி சித்தர் 5. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள். இவர்களை வழிபட சகல பாபங்களும் தீரும். 18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. “குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர். “உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார். “குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர். “பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி. பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார். “குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள் ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே பக்தியுடன் வணங்கும் எமக்கு நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே! ஸ்ரீ பதஞ்சலி சித்தரின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் பதஞ்சலி சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி இட்டு இரண்டுமுக தீபமெற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பொன்னிற வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும், பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி! 2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி! 3. ஒளிமயமானவரே போற்றி! 4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி! 5. கருணாமூர்த்தியே போற்றி! 6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி! 7. பூலோகச் சூரியனே போற்றி! 8. ஞான வழிகாட்டுபவரே போற்றி! 9. பேரும் புகழும் உடையவரே போற்றி! 10. இன்மொழி பேசுபவரே போற்றி! 11. இகபர சுகம் தருபவரே போற்றி! 12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி! 13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி! 14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி! 15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி! 16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் பூஜா பலன்கள் 1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும். 2. குடும்ப ஒற்றுமை உண்டாகும். 3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும். 4. நன்மக்கட் பேறு உண்டாகும். 5. எலும்பு சம்பந்தமான வியாதிகள் குணமடையும். 6. கல்விக் கலைகளில் சிறந்து விளங்கலாம். 7. எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். 8. விஷம், உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள். பதஞ்சலி முனி வரலாறு முற்றிற்று. சித்தர் குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார். ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. சிவனை பூசிப்பவரே போற்றி! 2. ஹடயோகப் பிரியரே போற்றி! 3. சூலாயுதம் உடையவரே போற்றி! 4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி! 5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 6. ஜோதி சொரூபரே போற்றி! 7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி! 8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி! 9. நாட்டியப்பிரியரே போற்றி! 10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி! 11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி! 12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி! 13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி! 14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி! 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். தியானச் செய்யுள் சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே! குதம்பை சித்தர் பூஜா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்.. 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். 3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும். 4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும். 6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை. குதம்பைச் சித்தர் வரலாறு முற்றிற்று. 16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர் இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார். தியானச் செய்யுள் ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே! ஓடுகின்ற நவக்கிரகங்களை கோடு போட்டு படுக்கவைத்த பரந்தாமனின் அவதாரமே! மண் சிறக்க விண்சிறக்க கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே! ஸ்ரீ இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி! 2. கருணாமூர்த்தியே போற்றி! 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி! 4. இளநீர் பிரியரே போற்றி! 5. உலகரட்சகரே போற்றி! 6. அபயவரதம் உடையவரே போற்றி! 7. மருந்தின் உருவமானவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. ஒளிமயமானவரே போற்றி! 10. கருவை காப்பவரே போற்றி! 11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி! 13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி! 14. அங்குசத்தை உடையவரே போற்றி! 15. தேவலீலை பிரியரே போற்றி! 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை. இடைக்காடர் சித்தரின் காரியசித்தி பூஜா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்.. 1. ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும். 2. கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை அகலும். 3. வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி வளம் பெருகும். 4. கற்பனைத் திறன், கவித்திறன் கூடும். 5. அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும். 6. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். 7. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிட்டும். 8. கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அகலும். 9. தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் நீங்கும். இடைக்காடர் சித்தரின் வரலாறு முற்றிற்று. 15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர் காக புசுண்ட சித்தர் ஒரு காக்கை வடிவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக் குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெரும் தபசி. இவர் பிரளய காலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார். ஆகையால் இவரை காகபுசுண்டர் என்பர். ஒருசமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா?” என்றார். எல்லோரும் மௌனமாக இருந்தனர். மார்க்கண்டேயர் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அவரும் “பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக எனது சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தினை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைத் தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி, அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலும்” என்றார். சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டரை அழைத்து வரும்படி சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தினைக் கூறினார். புசுண்டரும் தான் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார். தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லாழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார். காக புசுண்டர் துணைகாவியத்தில் இந்நிகழ்ச்சி விளக்கமாகக் கூறப்படுகிறது. காக புசுண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை: 1. புசுண்டர் நாடி, 2. காகபுசுண்டர் ஞானம் – 80 3. காக புசுண்டர் உபநிடதம் – 31 4. காக புசுண்டர் காவியம் – 33 5. காக புசுண்டர் குறள் – 16 இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புசுண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன. “இல்லறமாயினும், துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல்கள் வீண் பகட்டாகக் கருதப்படும்” என்கிறார். காக புசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காகபுசுண்ட முனி தியானச் செய்யுள் காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகா ஞானியே! யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும் காக்கை ஸ்வாமியே! மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய் காக புஜண்ட சுவாமியே! காக புஜண்ட சித்தர் பூஜை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ஸ்ரீ காக புசுண்ட சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி நீலோத்பலம், நீல சங்கு, தவனம், மரு கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள் 1. மகா ருத்ரரே போற்றி! 2. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 3. ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 4. அசுரர்களை அழிப்பவரே போற்றி! 5. தேவர்களைக் காப்பவரே போற்றி! 6. ஸ்ரீ ராமரை பூசிப்பவரே போற்றி! 7. அன்னப்பிரியரே போற்றி! 8. மானஸா தேவியை வணங்குபவரே போற்றி! 9. சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி! 10. மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி! 11. மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி! 12. நோய்களுக்கு மருந்தே போற்றி! 13. கோடி லிங்கங்களை பூஜிப்பவரே போற்றி! 14. பாவத்தைப் போக்குபவரே போற்றி! 15. நாரதகானப் பிரியரே போற்றி! 16. ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், லம் நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வணங்க வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும். காகபுசுண்டர் பூசையின் காரிய சித்தி பலன்கள் இவர் நவக்கிரகங்களில் குரு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்.. 1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். 2. பணப்பிரச்சினை, புத்திர பாக்கிய கோளாறு, அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையும் அகலும். 3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை ஆகியவை அகன்று லஷ்மி கடாக்ஷம் பெருகும். 4. வயிறு, குடல் சம்பத்தப்பட்ட கோளாறுகாள் நீங்கும். 5. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 6. வறுமை அகன்று வாழ்க்கை வளம்பெற இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விஷேசப்பலன்கள் கிடைக்கும். இவரை வழிபட சிறந்த நாள் வியாழன். காகபுசுண்டர் சித்தர் வரலாறு முற்றிற்று. 14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். உரோமமுனி இயற்றிய நூல்கள் 1. உரோமமுனி வைத்தியம் - 1000 2. உரோமமுனி சூத்திரம் - 1000 3. உரோமமுனி ஞானம் - 50 4. உரோமமுனி பெருநூல் - 500 5. உரோமமுனி குறுநூல் - 50 6. உரோமமுனி காவியம் - 500 7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30 8. உரோமமுனி இரண்டடி - 500 9. உரோமமுனி சோதிட விளக்கம் 10. நாகாரூடம் 11. பகார சூத்திரம் 12. சிங்கி வைப்பு 13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன. உரோமமுனி தியான செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம். உரோமசித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள் 1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி! 2. ஜடாமுடிப் பிரியரே போற்றி! 3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி! 4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி! 5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி! 6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி! 7. சங்கீதப் பிரியரே போற்றி! 8. தடைகளை நீக்குபவரே போற்றி! 9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி! 11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி! 12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி! 13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி! 14. காலத்தைக் கடந்தவரே போற்றி! 15. தெய்வீகச் சித்தரே போற்றி! 16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பூசைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். உரோமரிஷி சித்தரின் பூஜா பலன்கள் இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் இச்சித்தரின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்… 1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கிடும். 3. சஞ்சல புத்தி நீங்கும். 4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை மாறிடும். 5. தாயார், மகன், மகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். திங்கள் கிழமை இவருக்கு உகந்த நாள். உரோமமுனி வரலாறு முற்றிற்று. 13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர் இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார். சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள். சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர். வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார். சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார். சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது. ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்” என்றனர். அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள். சிவவாக்கியர் தியானத்தில் ஆழ்ந்தார். இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீதான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களை பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாகியம்’ என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது. இவர் ஒரு சமரச் ஞானி. இவர் பாடலில் இராமஜெபமும் உண்டு. சிவவாக்கியர் முதலில் நாத்திகராக இருந்தார். பிறகு சைவராக மாறி சிவவாக்கியர் ஆனார். அதன்பிறகு வீரவைணவரானார். இவர் நாடிப் பரீட்சை என்னும் நூலை எழுதினார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்கு சமாதி பூசை நடைபெற்று வருகிறது. தியானச் செய்யுள் சிவனில் சிந்தை வைத்து ஜீவனில் சித்து வைத்து அவனியைக் காக்க வந்தா அழகர் பெருமானே… அபாயம் நீக்கி சிவாயம் காட்டும் தங்கள் தங்கத் தாமரைத் திருவடிகள் காப்பு. சிவவாக்கியர் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, உதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள், குங்கும திலமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருக பாடி சங்கு புஷ்பம், அல்லது தும்பைப் புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. பாவங்களைப் போக்குபவரே போற்றி! 2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி! 3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி! 4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி! 5. ருத்ரனின் அவதாரமே போற்றி! 6. தீமைகளை அழிப்பவரே போற்றி! 7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி! 8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி! 10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி! 11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி! 12. கலைகளுக்கு அதிபதியே போற்றி! 13. காருண்ய மூர்த்தியே போற்றி! 14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி! 15. மங்களங்கள் தருபவரே போற்றி! 16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான “ ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! “ என்று 108 முறை ஜபிக்கவேண்டும். பின்பு நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். சிவவாக்கியரின் பூசா காரிய சித்திகள் இவர் சந்திர கிரகத்தினை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இவரை பூசிக்க வேண்டும். மேலும் இவரை வழிபட்டால்.. 1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை மாறும். 3. சஞ்சல புத்தி நீங்கும். 4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கும். 5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கட்கிழமையன்று பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சிவவாக்கியர் வரலாறு முற்றிற்று. 12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர் பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். “குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார். ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார். அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது. அரசனைப் பார்த்து “ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்” என்றார். உண்மை உணர்ந்த அரசி “எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்” என்று கைகூப்பி வேண்டினாள். அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள். அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார். இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. இவர் செய்த நூல்கள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன. மருதமலை சித்தர் தியானச் செய்யுள் அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து ! பின் உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே! ஆதிசேசனின் அருள் கண்டு ஆதிசிவன் மகன் வரம் கொண்டு சாதி மத பேதம் இன்றி காக்கும் சித்தரே காக்க! காக்க! பாம்பாட்டி சித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறுபலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமிகளின் படத்தை வைத்து, அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் சித்தருக்காக குறிப்பிட்ட தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறவேண்டும். பின்னர் அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் பின்வரும் 16 போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி! 2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி! 3. சர்ப்பரட்சகரே போற்றி! 4. முருகனின் பிரியரே போற்றி! 5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி! 6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி! 7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி! 8. ஸ்ரீ ஆதிசேசனை வணங்குபவரே போற்றி! 9. விஷத்தினை முறிப்பவரே போற்றி! 10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி! 11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி! 12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 14. சிவனுக்கு ஆபரணமாஅக இருப்பவரே போற்றி! 15. நந்திதேவரின் நண்பரே போற்றி! 16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு கூறி அர்ச்சித்தபின் மூலமந்திரமான “ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும். பின்னர் நிவேதனமாக சர்க்கரை கலக்காத பச்சைப் பாலையும், வாழைப்பழங்களையும் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். பாம்பாட்டி சித்தர் பூசா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்: 1. நாகதோசம் அகலும். 2. மாயை அகன்று மனத்தெளிவு பிறக்கும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழாகவும் தோன்றும் நிலை மாறும். 3. கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும். 4. போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் அகலும். 5. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். 6. ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோசம் நீங்கும். நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 7. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஓங்கும். 8. வீண்பயம் அகன்று தன்பலம் கூடும். 9. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும். இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம். பூசை செய்ய உகந்த நாள் சனிக்கிழமை. பாம்பாட்டி சித்தர் வரலாறு முற்றிற்று. >11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்      கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.      ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.      மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள்.      மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள். அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார்.      பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.      மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார்.      அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.      ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.      வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும் என்றாள்.      உன் குரு வடை கேட்டதால் போயிற்று இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.      இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.      கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார்.      ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார்.      இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார்.      இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார்.      மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.      “அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.      அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.      பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம் நீங்கள் யார் என்று கேட்டார்.      அதற்கு அவர் இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்ல தக்கது ஒன்றுமில்லை என்றார்.      கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.      வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.      அல்லமர் கோரக்கரை நோக்கி “சரி, உன் திறமையை நிருபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார்.      கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.      இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர். இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.      கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள்.      யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.      ‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.      கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள். கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை: 1. கோரக்கர் சந்திர ரேகை 2. கோரக்கர் நமநாசத் திறவுகோல் 3. கோரக்கர் ரக்ஷமேகலை 4. கோரக்கர் முத்தாரம் 5. கோரக்கர் மலைவாக்கம் 6. கோரக்கர் கற்பம் 7. கோரக்கர் முத்தி நெறி 8. கோரக்கர் அட்டகர்மம் 9. கோரக்கர் சூத்திரம் 10. கோரக்கர் வசார சூத்திரம் 11. கோரக்கர் மூலிகை 12. கோரக்கர் தண்டகம் 13. கோரக்கர் கற்ப சூத்திரம் 14. கோரக்கர் பிரம்ம ஞானம் இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. கோரக்கர் சித்தர் தியானச் செய்யுள் சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே சாம்பலில் தோன்றிய தவமணியே விடை தெரியா பாதையில் வீறாப்பாய் நடைபோடும் எம்மை கைப்பிடித்து கரை சேர்ப்பாய் கோரக்க சித்த பெருமானே. கோரக்கர் சித்தரின் பூசை முறை      தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையை மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்த குத்துவிளக்கை வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்தெண்ணை ஊற்றி ஐந்து முக விளக்கேற்ற வேண்டும். பலகையின் மேல் சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து படத்திற்கு பல வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி அழகிய மலர்களால் பின்வருமாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்து வணங்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி! 2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி! 3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி! 5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி! 6. ஆசைகளற்ற அருளே போற்றி! 7. மாயைகளை களைபவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. மாசற்ற மனமே போற்றி! 10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி! 11. ஞான வழி காட்டுபவரே போற்றி! 12. ஞானஸ்கந்தரே போற்றி! 13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி! 14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி! 15. உலக மக்களில் நண்பரே போற்றி! 16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும்.      பிறகு மூலமந்திராமான “ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை சொல்லி வழிபடவேண்டும். நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச் சக்கரை கலவை வைத்து வழிபடவேண்டும். மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும். கோரக்கர் சித்தர் பூசை பலன்கள் 1. ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் வலகி நன்மை உண்டாகும். 2. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சனைகள் தீரும். 3. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். 4. எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். 5. படிப்பில் உள்ள மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். 6. நன்மக்கட் பேறு கிடைக்கும். 7. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். 8. பிரம்மஹத்தி தோசம் நீங்கும். 9. வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும். பூசைக்கு ஏற்ற நாள் கார்த்திகை நட்சத்திர நாள், நல்ல பலன் தரும். கோரக்கர் சித்தரின் வரலாறு முற்றிற்று. 10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்      இவரை கருமசௌமியர் என்பவரின் சீடர் என்றும் அகத்தியரின் சீடர் என்றும் கூறுவர். இவர் முற்பிறவியில் இராமதேவர், மறுபிறப்பில் தேரையர் ஆவார்.      அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.       அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.      பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.      சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.      கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.      அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.      குறிப்பறிந்து செயல்பட்ட இராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.      காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.      சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட இராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.      தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.   உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.      இராமதேவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.   அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அவரின் உறுதுணையால் தேரையர் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார்.      ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.   ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.      தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார்.      தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.  தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார். உலக நன்மையின் பொருட்டு... பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறி நூல், தைல வர்க்க சுருக்கம், வைத்திய மகா வெண்பா, மணி வெண்பா, மருந்துப் பாதம் முதலான நூல்களை இயற்றினார். அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.      வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.       திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார்.     தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.       ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார். ஸ்ரீ தேரையர் தியான செய்யுள் மாய மயக்கம் நீக்கி காய கல்பம் தேடி மூலிகை கொணர்ந்து முதுகுகூன் நிமிர்த்திய அகத்தியர் சீடரே உன் பாதம் சரணம். தேரையர் பூசை முறைகள்       அகப்புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும். அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.      முதலில் தியானச் செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும். பதினாறு போற்றிகள் 1. குரு மெச்சிய சீடரே போற்றி! 2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி! 3. சிவனை பூசிப்பவரே போற்றி! 4. சங்கடங்களை போக்குபவரே போற்றி! 5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி! 6. சாந்த சொரூபரே போற்றி! 7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி! 8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி! 9. சித்த சுத்தியுடையவரே போற்றி! 10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி! 11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி! 12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி! 13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி! 14. கண் ஒளி தந்த கருணையே போற்றி! 15. குறை தீர்க்கும் நிறையே போற்றி! 16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!      அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது. தேரையர் பூசா பலன்கள் 1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும். 2. குடும்ப ஒற்றுமை ஓங்கும். 3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும். 4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும். 5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும். 6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும். 7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும். 8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும். 9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். தேரையர் வரலாறு முற்றிற்று. 9. காவேரி தந்த அகத்திய சித்தர் அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை. இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார். வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை: 1. அகத்தியர் வெண்பா 2. அகத்தியர் வைத்தியக் கொம்மி 3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம் 4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி 5. அகத்தியர் வைத்தியம் 1500 6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி 7. அகத்தியர் கர்ப்பசூத்திரம் 8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம் 9. அகத்தியர் வைத்தியம் 4600 10. அகத்தியர் செந்தூரம் 300 11. அகத்தியர் மணி 4000 12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு 13. அகத்தியர் பஸ்மம் 200 14. அகத்தியர் நாடி சாஸ்திரம் 15. அகத்தியர் பக்ஷணி 16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200 17. சிவசாலம் 18. சக்தி சாலம் 19. சண்முக சாலம் 20. ஆறெழுத்தந்தாதி 21. காம வியாபகம் 22. விதி நூண் மூவகை காண்டம் 23. அகத்தியர் பூசாவிதி 24. அகத்தியர் சூத்திரம் 30 போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும் 25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம் 26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அகத்தியர் பெருமானின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி! 2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி! 3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி! 4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி! 5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி! 6. சித்த வைத்திய சிகரமே போற்றி! 7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி! 8. இசைஞான ஜோதியே போற்றி! 9. உலோப முத்திரையின் பதியே போற்றி! 10. காவேரி தந்த கருணையே போற்றி! 11. அகத்தியம் தந்த அருளே போற்றி! 12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி! 13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி! 14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி! 15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி! 16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி! நிவேதனம் பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும். அகத்திய முனிவரின் பூசா பலன்கள் 1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும். 2. கல்வித்தடை நீங்கும். 3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும். 4. முன்வினை பாவங்கள் அகலும். 5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும். 6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும். 7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும். 8. சகலவிதமான நோய்களும் தீரும். 9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று. 8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது. அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார். சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார். சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர். நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார். சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்: 1. சுந்தரானந்தர் காவியம் 2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி 3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம் 4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு 5. சுந்தரானந்தர் கேசரி 6. சுந்தரானந்தர் சித்த ஆனம் 7. சுந்தரானந்தர் தீட்சா விதி 8. சுந்தரானந்தர் பூசா விதி 9. சுந்தரானந்தர் அதிசய காரணம் 10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம் 11. சுந்தரானந்தர் மூப்பு 12. சுந்தரானந்தர் தண்டகம் ஆகிய நூல்களை எழுதினார். மேலும் பயிர் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார். தியானச்செய்யுள் சித்து விளையாட்டில் சிறந்தவரே சிவனுடன் கலந்தவரே ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே அபயம் அளிக்கும் அருளாளரே மதுரையம்பதி வாழ் மகத்துவமே உன் பாதம் சரணம். சுந்தரானந்தர் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. ஒளி பொருந்தியவரே போற்றி! 2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி! 3. லோக ஷேம சித்தரே போற்றி! 4. யோக மூர்த்தியே போற்றி! 5. அவதார புருஷரே போற்றி! 6. அபயமளிப்பவரே போற்றி! 7. சிவ யோகியே போற்றி! 8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி! 9. ஜடாமுடிப் பிரியரே போற்றி! 10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி! 11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி! 12. சுகங்களைத் தருபவரே போற்றி! 13. தாய் போல் காப்பவரே போற்றி! 14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி! 15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி! 16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி! எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும். சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்: 1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது. 3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். 4. புத்திர பாக்கியம் உண்டாகும். 5. குரு பிரீதி அடைவர். 6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. சித்த பிரமை அகலும். 8. ஞாபக சக்தி அதிகரிக்கும். 9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும். சுந்தரானந்த சித்தர் வரலாறு முற்றிற்று. 7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர் இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது. சட்டைமுனி இயற்றிய நூல்கள்: சட்டைமுனி நிகண்டு – 1200 சட்டைமுனி வாதகாவியம் – 1000 சட்டைமுனி சரக்குவைப்பு – 500 சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500 சட்டைமுனி வாகடம் – 200 சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200 சட்டைமுனி கற்பம் – 100 சட்டைமுனி உண்மை விளக்கம் – 51 தியானச் செய்யுள் சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே! சட்டைமுனி சுவாமி பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி! 2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி! 3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி! 4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி! 5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி! 6. வருண பகவானை வணங்குபவரே போற்றி! 7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி! 8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி! 9. கவலைகளை அகற்றுபவரே போற்றி! 10. நோய்களை அழிப்பவரே போற்றி! 11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி! 12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி! 13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி! 14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 15. ராமநாமப் பிரியரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால், 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும். 3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும். 4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும். 6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். 8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம். பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. சட்டைமுனி சித்தர் வரலாறு முற்றிற்று. 6. அகப்பேய் சித்தர் திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது. மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார். “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு. இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை: அகப்பேய் சித்தர் பாடல் – 90 அகப்பேய் பூரண ஞானம். இவர் சித்தியடைந்த திருத்தலம் : - திருவையாறு. தியானச்செய்யுள் இலை உடையுடன் கலை உருவாய் காட்சி தரும் காரியசித்தி சுவாமியே மாறாத சித்தியை மரப்பொந்தினில் பெற்ற மங்காச் செல்வரே அசைகின்ற புத்தியை இசைக்கின்ற சித்தியால் இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே. அகப்பேய் சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் சுவானியின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்கான தியானச் செய்யுளை மனமுருகக் கூற வேண்டும். பின்பு பின்வருன் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி! 2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி! 3. பித்ருப்ரியரே போற்றி! 4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி! 5. சாந்தமாக இருப்பவரே போற்றி! 6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி! 7. சங்கீதப்பிரியரே போற்றி! 8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி! 9. ரத்தினங்களை அணிபவரே போற்றி! 10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி! 11. கஜபூசை செய்பவரே போற்றி! 12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி! 13. உலகரட்சகரே போற்றி! 14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி! 15. முக்தி அளிப்பவரே போற்றி! 16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய் சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக இளநீர் (வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பழம் பால் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ அகப்பேய் சித்தரின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் குரு பகவானைப் பிரதிபலிப்பவர். வியாழக்கிழமை இவரை பூசிக்க சிறந்த நாள். இவரை வழிபட்டால், 1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷ்ங்கள் அகலும். 2. பணப்பிரச்சினைகள், புத்திர பாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை போன்றவை அகலும். 3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். 4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 5. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 6. கொடுக்கல், வாங்கல், பிரச்சினை வழக்குகள் அகலும். 7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும். 8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். அகப்பேய் சித்தர் வரலாறு முற்றிற்று. 5. கொங்கணர் சித்தர்      எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.      கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.      தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.      ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார். கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.      ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.       தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.       திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.       கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.       தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.      கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் ப சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.       தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.    பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார். கொங்கணவர் இயற்றிய நூல்கள்: கொங்கணவர் வாதகாவியம் – 3000 கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500 கொங்கணவர் தனிக்குணம் – 200 கொங்கணவர் வைத்தியம் – 200 கொங்கணவர் வாதசூத்திரம் – 200 கொங்கணவர் தண்டகம் – 120 கொங்கணவர் ஞான சைதன்யம் – 109 கொங்கணவர் சரக்கு வைப்பு – 111 கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100 கொங்கணவர் வாலைக்கும்பி – 100 கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80 கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49 கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45 கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40 கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21 கொங்கணவர் சுத்த ஞானம் – 16 என்பவையகும். கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள் கொக்கை எரித்த கொங்கணரே அம்பிகை உபாசகரே கௌதமரின் தரிசனம் கண்டவரே இரசவாதமறிந்த திவ்யரே உங்கள் திருப்பாதம் சரணம். கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்: அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப்பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும். முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி, அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி! 2. அம்பிகைப் பிரியரே போற்றி! 3. இரசவாத சித்தரே போற்றி! 4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி! 5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி! 6. செல்வங்களைத் தருபவரே போற்றி! 7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி! 8. நோய்களை அழிப்பவரே போற்றி! 9. வறுமையை போக்குபவரே போற்றி! 10. ஞானம் அளிப்பவரே போற்றி! 11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி! 12. மாயையை அகற்றுபவரே போற்றி! 13. கருணாமூர்த்தியே போற்றி! 14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி! 15. கொங்கு தேசத்தவரே போற்றி! 16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி! இவ்வாறு அர்ச்சித்தபிறகு “ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!” என்று 108 முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்: முறைப்படி இவரை வழிபட்டால் 1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும். 2. கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும். 3. தியானம் கைகூடும். 4. சகவாச தோசம் நீங்கும். 5. தீய பழக்கங்கள் விலகும். 6. ஞாபக சக்தி உண்டாகும். 7. உறவினர்களின் பலம் உண்டாகும். 8. முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள். இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள். கொங்கணவர் சித்தர் வரலாறு முற்றிற்று. 4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்      இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு: ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார். பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்: புலிப்பாணி வைத்தியம் – 500 புலிப்பாணி சோதிடம் – 300 புலிப்பாணி ஜாலம் – 325 புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 புலிப்பாணி பூஜாவிதி – 50 புலிப்பாணி சண்முக பூசை – 30 புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை. தியானச் செய்யுள்: மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம். புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும். பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி! 2. தண்டபாணிப் பிரியரே போற்றி! 3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி! 5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி! 6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி! 7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி! 8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி! 9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி! 10. தெய்வயானையின் புதல்வரே போற்றி! 11. சூலாயுதம் உடையவரே போற்றி! 13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி! 16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும். 1. நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும். 2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். 3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும். 4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும். 5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 6. இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். 7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும். 8. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும். 9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும். புலிப்பாணி சித்தர் வரலாறு முற்றிற்று.   3. வேறு கருவில் ஊராத கருவூரார் சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். “கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார். கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். சித்தரின் இரசவாத வித்தையின் மூலம் உருவான அச்சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார். போகர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாக திகழ்ந்தனர். சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல் புண்ணிய தலங்களை தரிசித்துவிடு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது. என்ன இது அதிசயம்? மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி; அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார். தாம் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தார். தான் அனுபவித்த இந்த அற்புத இன்பத்தை உலகிலுள்ள அனைவரும் கண்டு அனுபவிக்க வழியை யோசித்தார். இறுதியில், தான் கண்ட வடிவத்தை மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென முடிவு செய்தார். “கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் கூறினார். ஆனால் சிற்பிகள் என்ன முயன்றும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் பலனில்லாமல் போய்விட்டன. தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது பிரதான சீடரான கருவூராரை அழைத்து, “கருவூரா! அந்த விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு சொல்கிறேன். நீ போய் செய்து முடி” என்று சொல்லி கருவூராருக்கு வழிமுறைகளை அறிவித்து வழியனுப்பினார். நாற்பத்தெட்டாவது நாள் சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசி நாள். சிற்பிகளெல்லோரும் சொல்லவியலாத துன்பத்தில் இருந்தனர். மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார். “கவலைப்படாதீர்கள், மன்னரின் விருப்பப்படியே ஆடல் வல்லாரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறினார். சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாத போது உம்மால் எப்படி முடியும்?” என்றார்கள். “என்னால் முடியும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே”, என்றார் கருவூரார். விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார். சிற்பிகள் நம்பமுடியாமல் வெளியே காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கருவூரார் வெளியே வந்து, “போய்ப் பாருங்கள், உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது” என்று சொன்னார். நம்ப முடியாத ஆச்சரியத்தில் சிற்பிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர். மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு இருந்த நடராசர் சிலையின் அற்புத அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர முடிந்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது. சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது. “சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமையாகக் கேட்டார். சிற்பிகள் பயந்து நடுங்கினர். “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தச் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அம்பலவர் அடியார் ஒருவர் வந்து இந்தச் சிலையை செய்தளித்தார்” என்றார்கள். மன்னர் திகைத்து விட்டார். “அடியார் செய்தாரா? அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர். உடனே பணியாட்கள் கருவூரார் இருக்கும் இடம் சென்று அவரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார். அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், மன்னர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. திடீரென்று அவரெதிரே போகர் தோன்றினார். போகரின் பின்னால் தலைகளில் தங்க மூட்டைகளுடன் அவருடைய ஐந்து சீடர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார். “மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய், இதுதானா உன் ஆட்சி முறை?” எனக்கேட்டார் போகர். அரசர், “சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார். “சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாதே! அதனால் தான் செம்பைக் கொஞ்சம் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் ச்ய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது. அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். சரி போனது போகட்டும் இந்தா நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார். போகர், “அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார். மன்னர் திடுக்கிட்டு போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். எழுந்திருங்கள் அரசே நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார் போகர். அதற்கு அரசர் “தாங்களே கருவூராரை சிறையிலிருந்து வெளியில் வரும்படி அழையுங்கள்” என்றார். அவர் அழைக்கவும் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார். அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கருவூரார் அங்கிருந்து சென்றார். திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது. தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாவிசேகமும் செய்து வைத்தார். மன்னன் கொண்டாடினான். மக்கள் மகிழ்ந்தார். இறைவனும் மனங்களித்தார். தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை, அபரங்சி என்ற தாசி சந்தித்தாள். அவரை முறைப்படி வணங்கி, ஞான சாதனையில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டினாள். அவள் ஆர்வத்தைப் பாராட்டி தீர்த்து வைத்தார். மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். கருவூரார் விடைபெறுகையில் அபரஞ்சி வருந்தினாள். “நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறி தன் யாத்திரையைத் தொடங்கினார். மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போன செய்தி தெரிந்தது. அதே சமயம் திருவரங்கக் கோவிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அம்மாலை இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். பஞ்சாயத்து தொடங்கியது. “பெருமானின் நகை உன்னிடம் எப்படி வந்தது” என்று அனைவரும் கேட்டனர். அபரஞ்சியும் “இந்த பள்ளி கொண்ட பெருமானின் சார்பாக கருவூரார் கொடுத்த பரிசு இது” என்று அமைதியாக பதிலளித்தாள். கோயிலதிகாரி திடுக்கிட்டார். “கருவூரார் எங்கே?” என்று கேட்டார். அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைத்தவுடன் அவர் தோன்றினார். “இந்த பிரச்சினைக்கு அரங்கனே பதில் சொல்வான்” என்றார். அது சமயம் எல்லோரும் கேட்கும் வண்ணம், “நீங்கள் எல்லோரும் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க நினைக்கிறீர்கள். நானோ என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க நினைத்தேன். நான் தான் அபரஞ்சிதாவுக்கு நவரத்ன மாலையை கருவூரார் மூலம் அளித்தேன்”, என்று அரங்கர் அசரீரி மூலம் சொன்னார். உண்மையை அறிந்த ஊரார்கள் கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டார்கள். அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர். அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார். அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார். கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார். கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. கருவூரார் செய்த நூல்கள்: கருவூரார் வாத காவியம் – 700 கருவூரார் வைத்தியம் – 500 கருவூரார் யோக ஞானம் – 500 கருவூரார் பலதிட்டு – 300 கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105 கருவூரார் பூரண ஞானம் – 100 கருவூரார் மெய் சுருக்கம் – 52 கருவூரார் சிவஞானபோதம் – 42 கருவூரார் கட்ப விதி – 39 கருவூரார் மூப்பு சூத்திரம் – 30 கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). - ஆகியவைகள் ஆகும். தியானச் செய்யுள்: கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே ! திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே! வாரி வழங்கி அருள் கொடுத்தாய்! மாறாத சித்துடையாய்! கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன் கருணைக் கரங்களே காப்பு! கருவூரார் சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் கருவூரார் சித்தர் படத்தை வைத்து அதன் முன் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் துளசி, மல்லிகைப் பூ ஆகியவற்றைக் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. சிவனே போற்றி! 2. சிவனைப் பூசிப்பவரே போற்றி! 3. நாடி யோகியே போற்றி! 4. ஒளி பொருந்தியவரே போற்றி! 5. அவதார புருசரே போற்றி! 6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி! 7. லோக சேம சித்தரே போற்றி! 8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி! 9. யோக மூர்த்தியே போற்றி! 10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி! 11. கற்பூரப் பிரியரே போற்றி! 12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி! 13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி! 14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி! 15. கருவைக் காப்பவரே போற்றி! 16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். கருவூர் சித்தரின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால், 1. ஜாதகத்தில் உள்ள சனி தோசம் நீங்கி நன்மை கிடைக்கும். 2. ஏழரைச் சனி, அட்டமச் சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும். 3. வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகள் நீங்கும். 4. இரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். 5. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சினகள் அகலும். 6. படிப்பில் உள்ள மந்த நிலை மாறும். 7. எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும். 8. எலும்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும். 9. பிரம்மஹத்தி தோசம் அகலும். 10 புத்திர பாக்கியம் கிடைக்கும். 11. வேலையாட்கள் முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். இவரை வழிபட சிறந்த கிழமை: சனிக்கிழமை. இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம். கருவூர் சித்தர் வரலாறு முற்றிற்று. சித்தர்களின் வாழ்க்கை அட்டவணை: எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம். 1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம். 2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம். 3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர். 4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம். 5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம். 6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர். 7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில். 8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை. 9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை. 10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம். 11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி. 12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை. 13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி. 14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை. 15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம். 16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர். 17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி. 18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில். -------------- ---------- 2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்      அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.       போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார். 1. போகர் – 12,000 2. சப்த காண்டம் – 7000 3. போகர் நிகண்டு – 1700 4. போகர் வைத்தியம் – 1000 5. போகர் சரக்கு வைப்பு – 800 6. போகர் ஜெனன சாகரம் – 550 7. போகர் கற்பம் – 360 8. போகர் உபதேசம் – 150 9. போகர் இரண விகடம் – 100 10. போகர் ஞானசாராம்சம் – 100 11. போகர் கற்ப சூத்திரம் – 54 12. போகர் வைத்திய சூத்திரம் – 77 13. போகர் மூப்பு சூத்திரம் – 51 14. போகர் ஞான சூத்திரம் – 37 15. போகர் அட்டாங்க யோகம் – 24 16. போகர் பூஜாவிதி – 20 இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர். போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார். போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார். சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது. பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். “யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார். அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார். போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர். தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது. இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை. தியானச்செய்யுள் சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு; மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே; சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே; நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க… மகா போகர் சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள் 1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி! 2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி! 3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி! 4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி! 5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி! 6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி! 7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி! 8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி! 9. பசும்பால் பிரியரே போற்றி! 10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி! 11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி! 12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி! 14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி! 15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி! 16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும். ஸ்ரீ போகரின் பூசை முறைகள் இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும். 1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும். 2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும். 3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும். 4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும். 5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும். 7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும். 8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். போகர் வரலாறு முற்றிற்று. பதிந்தது கவிப்ரியன் 0 comments 1. திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. 1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000 2. திருமூலர் சிற்ப நூல் – 1000 3. திருமூலர் சோதிடம் – 300 4. திருமூலர் மாந்திரிகம் – 600 5. திருமூலர் சல்லியம் – 1000 6. திருமூலர் வைத்திய காவியம் – 1000 7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600 8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200 9. திருமூலர் சூக்கும ஞானம் – 100 10. திருமூலர் பெருங்காவியம் – 1500 11. திருமூலர் தீட்சை விதி – 100 12. திருமூலர் கோர்வை விதி – 16 13. திருமூலர் தீட்சை விதி – 8 14. திருமூலர் தீட்சை விதி – 18 15. திருமூலர் யோக ஞானம் – 16 16. திருமூலர் விதி நூல் – 24 17. திருமூலர் ஆறாதாரம் – 64 18. திருமூலர் பச்சை நூல் – 24 19. திருமூலர் பெருநூல் – 3000 போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமூலர் வரலாறு நிறைவுற்றது
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 7/30/2025 2:40:23 PM


psssrf ஒரு பக்க ஜாதகம், one page horoscope ஒரு பக்க ஜாதகம்



அனந்த காலசர்ப்பம், குலிகா காலசர்ப்பம்,வாஸுகி காலசர்ப்பம்,சங்கினி காலசர்ப்பம், பத்ம காலசர்ப்பம்,மகாபத்ம காலசர்ப்பம்,தக்‌ஷக காலசர்ப்பம், கர்கோடக காலசர்ப்பம், சங்காபா காலசர்ப்பம்,பாதம் காலசர்ப்பம்,விஷ்ட காலசர்ப்பம் ,சங்கர காலசர்ப்பம் , இவை உங்கள் ஜாதகத்தில் உள்ளதா என



சூரியன் கார்த்திகை நட்சத்திரம் 2, ஆம் பாதத்தில் இருந்தால் பலன்#tamil#astrology#natchathirapalan