Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


இசைத் தமிழில் வழங்கிவரும் சுரங்களுக்குச் சோதிடப் பொருத்தம்.
இசைத் தமிழில் வழங்கிவரும் சுரங்களுக்குச் சோதிடப் பொருத்தம். தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவந்த 24 சுருதிகளை இராசி மண்டலத்தில் சொல்லி, அப்பன்னிரண்டு இராசிகளில்வரும் 12 சுரங்களை 12 பாலையாகக்குறித்து, அவைகள் இணை, கிளை, பகை, நட்பாகப் பொருந்தும் விதத்தையும் காட்டி அவைகளுள் இன்னின்ன சுரங்கள் இன்னின்ன சுரங்களோடு பொருந்தும் என்றும் அப்படிப் பொருந்தும் சுரங்களில் இன்னவைகள் ஏழு சுரங்களாய் வரும் என்றும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இராசிவட்டத்தில் ஏழு கிரகங்கள் சஞ்சரிப்பதுபோலவும், சூரியன் மாதத்திற்கு ஒவ்வொரு இராசியாக 12 இராசிகளில் சஞ்சரிப்பது போலவும், சங்கீதத்திலும், குரல் (ச) 12 சுரங்களில் ஒவ்வொன்றாய் மாறிக்கொண்டுவர அதற்குப் பொருத்தமாக ஏழு சுரங்களும் இன்னின்ன இடங்களில் வரவேண்டுமென்று சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறது. சோதிடத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றிருந்த தமிழ்மக்கள் தாங்கள் பெற்றிருந்த அறிவுக்கேற்ற விதமாய்ச் சங்கீத சாஸ்திரத்திலும் மிகுந்த தேர்ச்சிபெற்றிருந்ததை இதன் முன் பல குறிப்புக்களால் காண்கிறோம். சோதிடத்தைப் பற்றிய தமிழ் நூல்கள் இன்று நாம் காணக்கிடைக்காவிடினும் தமிழ்மக்கள் மிகப்பூர்வந்தொட்டே சோதிடத்தில் தேர்ச்சியுடையவர்களாயிருந் தார்களென்று தெரிகிறது. இற்றைக்குச் சுமார் 2000 வருடங்களுக்கு முன் 1900 வருடங்களாக நடைபெற்ற கடைச்சங்க காலத்திருந்த ஆசிரியர் நல்லந்துவனார், பாடியதும் சைய மலையில் மழைபெய்ய ஆரம்பித்த நேரத்தைக் குறிப்பதுமாகிய பரிபாடலையும் அதற்குப் பரிமேலழகர் எழுதியதாகச் சொல்லப்படும் உரையையும் அடியிற் காண்க. ஆசிரியர் நல்லந்துவனார் பாடியதும் நாகனார்இசையமைத்ததுமாகிய அடியிற்கண்டபரிபாடல். ‘விரிகதிர் மதியொடு வியல்விசும்பு புணர்ப்ப வெரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையு ளுருகெழு வெள்ளிவந் தொறியல்சேர வருடைப் படிமகன் வாய்ப்பப் பொருடகுபுந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடிய லங்கியுயர்நிற்ப வந்தணன் பங்குவி னில்லத்துணைக்குப் பாலெய்த விறையமன் வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை மதிய மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுன மடைய விரிகதிர் வேனில் திரவரவு மாரி யியைகென விவற்றாற் புரைகெழு சையம் பொழிமழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல்’ (இ-ள்) விசும்பு மதியத்தொடு புணர்ப்பனவாகிய வெரியுஞ் சடையும் வேழமு மதுலாக வற்றின் கீழிருந்து விதியால் வேறுபடுக்கப்பட்ட வோரொன் றொன்பது நாளாகிய மூவகை இராசிகளுள் மேலவாய நாண்மீன்களைக் கீழதாகிய மரிபுணர்தலாவ தவ்வநேர்நிற்றன் மாத்திரமாகலின் அவற்றை விசும்பு புணர்ப்பன வென்றார். எரி - அங்கியைத் தெய்வமாகவுடைய கார்த்திகை; அதனாலதன் முதலாதலையுடைய விடப முணர்த்தப்பட்டது. சடை - சடையையுடைய வீசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை; அதனாலதனையுடைய மிதுன முணர்த்தப்பட்டது. வேழம் - வேழத்திற்கு யோனியாகிய பரணி அதனாலதனையுடைய மேழ முணர்த்தப்பட்டது. இவை முதலாக விவற்றின் கீழிருத்தலாவ திவற்றது பெயரான் இடபவீதி மிதுனவீதி மேடவீதி யென வகுக்கப்பட்ட இம்மூவகை வீதியுள்ளுமடங்குதல். அவற்றுள், இடபவீதி கன்னி துலா மீன மேடமென்பன; மேடவீதி, இடபம் மிதுனங் கற்கடகஞ் சிங்கமென்பன. ஓரிராசியாவது இரண்டேகா னாளாகலின் நந்நான்கிராசியாகிய விவை யோரொன் றொன்பது நாளாயின. கோட்களுக் கிடனாகலானிவை பன்னிரண்டு மிருக்கையெனப்பட்டன. நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச், செவ்வாய் மேடத்தைச் சேரப், புதன் மிதுனத்தைச் சேரக், கார்த்திகை யுச்சமாக விடிதலுண்டாக வியாழஞ் சனியினில்ல மிரண்டாகிய மகரங்கும்பங்கட் குப்பாலையாகிய மீனத்தைச் சேர, யமனைத் தமயனாகவுடைய சனி வில்லுக்குப் பின்னாகிய மகரத்தைச் சேர, விராகு மதிமறையும்படி வருநாளின்கண் ஆதித்தன் சீயத்தையடையவென்பார். ‘புலர் விடியலங்கியுயர் நிற்ப’ என்றார். பாம்பி மதியமறையவொல்லை வருநாளென்றது அவ் வாவணிமாதத்து மதிநிறை நாளாகிய வவிட்டத்தை எனவே, மதியுமிராகுவு மகரத்து நிற்க வென்பதூஉம், கேது வதற் கேழாமிடமாகிய கற்கடகத்து நிற்க வென்பதுதூஉம் பெறப்பட்டன. இதனாற் சொல்லிய தாவணித்திங்க ளவிட்டநாளி னிக்கோட்க டமக்குரிய நிலமாகிய விவ்விராசிகளி னிற்பச் சோமனை யரவுதீண்ட பென்பதாயிற்று. அகத்திய னென்னுமீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்த அப்பொதியிலை யிட்டெனவுந் தோன்றநின்றது. முறுகின வெயிலையுடைய முதுவேனிற்குப் பின்வருங் கார்காலத்து மழைபெய்கவென்ற விவ்விதி வழியாலுயர்ந்த சையமலைக்கண் மழைபெய்ய. பரிமேலழகர் நச்சினார்க்கினியார் காலத்திலிருந்தவராகத் தெரிகிறது. ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்க காரத்திலிருந்தவராகத் தெளிவாகத் தெரிகிறோம். இவரைச் சுமார் கி. மு. 1000 வருடங்களுக்கு முன்னிருந்தவராகவாவது உத்தேசிக்கலாம். இவரால் கலித்தொகை யென்னும் நூல் இயற்றப்பட்டுள்ளது. அடியில் வரும் இராசிச் சக்கரத்தால் இவர் மேற்கண் பரிபாடலில் குறிப்பிட்ட பொருளை அறிந்துகொள்ளலாம். நாம் சோதிடவிணயமாகக் கவனிக்கவேண்டிய அநேக காரியங்கள் அதிலிருந்தாலும் பூர்வம் தமிழ்மக்கள் சோதிடத்தில் தேர்ந்தவர்களாயிருந்தார்கள் என்று சொல்வதற்கு மாத்திரம் அதை எடுத்துக்கொண்டதினால் மற்ற விபவரங்கள் இங்கே சொல்லவேண்டிய அவசியமில்லை யென்று விடப்பட்டன. தென்னிந்தியாவின் பூர்வத்திலுள்ளோ சொல்லிய வட்டப்பாலையையும் அதன் அமைப்பையும் கவனிப்போமானால், அவர்கள் சங்கீதத்தில் மிகுந்த ஆராய்ச்சியும் தேர்ச்சியுமுள்ளவர்களாய்த் தாங்கள் மிகுந்த தேர்ச்சியடைந்திருந்த சோதிடசாஸ்திரத்தின் சிலபாகங்களையும் சங்கீதத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பன்னிரண்டு இராசிகளில் மேடமாதியாகச் சுரங்கள் பன்னிரண்டையும் வகுத்து, அவற்றை இணை, பகை, கிளை, நட்பு என்பதாகப் பிரித்து அவைகளுக்குப் பொருத்தமும் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்ப சுரமாகிய சட்ஜம் மேருவினிடமாக விருப்பதால் அதை அதன் கீழுள்ள ஸ்தாயிக்கு முடிந்த பன்னிரண்டாம் இடமாக வைத்துக்கொண்டால் அதன் மேல் ஸ்தாயியின் ஆரம்ப சுரம் இடபமாம். இது மிதுனம் முதல் வலமுறையாக இடபத்தில் பன்னிரண்டு என்று முடிகிறது. பன்னிரண்டு என்ற ஸ்தானத்தை மோட்ச ஸ்தானமென்று பெயர் வைத்திருக்கிறார்கள். எப்படியென்றால் லக்கினமாதியாக மோட்ச மீறாக உள்ள 12 ஸ்தானங்களுக்கும் இன்னின்ன ஸ்தானம் இன்னின்னபலனைச் சொல்லக்கூடிய ஸ்தானமென்பதை அடியில் கண்டவிதமாய்ச் சோதிடநூல்களிற் சொல்லியிருக்கிறார்கள். அவைகளில் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் விரிவாய்ச் சொல்லப்பட்டிருந்தாலும் அவைகளிற் சுருக்கமான பலன்களையும் தற்காலத்ல் நாம் வழங்கி வரும் பலன்களையும் காட்டும்பெயர்களை மட்டும் இங்குக் குறித்திருக்கிறேன்.  1  2  3 4 5 6 லக்கினம     தனம சகோதரம் மாதுரு புத்தி சத்துரு ஜீவன் குடும்பம் வீரியம் வித்தை புத்திரன் வியாதி தேகம நேத்திரம் ஆள் அடிமை வாகனம் பூர்வ புண்ணியம்  துன்பம அயுள்காலம் வாக்கு பூமி மாமன பகை ரூபம் தெய்வம் 7  8 9 10 11 12 களத்திரம ஆயுள் பிதுர்  ஜீவனம் ஆயம் மோட்சம் சுகம் மரணம் பாக்கியம கர்மம லாபம் விரயம் இன்பம் நஷ்டம் தர்மம் தொழில் மூத்தசகோ வீடு விவாகம் பகை குரு யாத்திரை தரன் நித்திரை அலங்காரம் தந்தை திருப்பணி அறிவு இவைகளில் பன்னிரண்டாமிடம் மோட்ச ஸ்தானமென்று சொல்லப்படுகிறது. ஏழாமிடம் களத்திர ஸ்தானமென்று சொல்லப்படுகிறது. இப்படியே 1, 2, 3 முதலிய பன்னிரண்டு ஸ்தானங்களும் அவற்றின் முதல் வரியிலுள்ள பெயரைக்கொண்டே அழைக்கப்படுவது பெரும் பாலும் வழக்கமாயிருந்தாலும், அதன் கீழள்ள ஒவ்வொரு பெயராலும் அழைக்கப் படலாம். இம்முறையை அடியில்வரும் வசனங்களினால் அங்கங்கே ஒத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு இன்னின்ன ஸ்தானங்கள் சுபஸ்தானங்களென்றும் இன்னின்ன ஸ்தானங்கள் நல்ல பலனைக் கொடுக்கமாட்டாவென்றும் அடியில் வரும் சில வசனங்களையும் சோதிட சாஸ்ரிரத்தில் காண்கிறோம். அதுபோலவே சங்கீத சாஸ்திரத்திலும் அவைகளின் பெரும்பாகம் ஒத்துவருகிறதென்று நாம் காண்போம்.  கேந்திரம் 1, 4, 7, 10 முக்காற் பார்வை 5, 9 திரிகோணம் 1, 5, 9, முற்றிலும் சுபஸ்தானங்கள் 1, 2 4, 5, 7, 9 மறையு 3, 6, 8, 12 சுபமல்லாத ஸ்தானங்கள் 3, 6 ,8, 10, 12 பணபரம் 2, 11 பார்வை 5, 7 ,9 முழுப்பார்வை 7, எல்லாக் கிரகங்களுக்கும் பலன் ஏறும் இடங்கள் உச்சம், ஆட்சி, கேந்திரம், மூலதிரிகோணம். எல்லாக் கிரங்களும் 5-9ல் இன்ப பலனைக் கொடுப்பார்கள். 3, 6, 8, 12க்கு அதிபர்கள் துன்ப பலனைக் கொடுப்பார்கள். லக்கினத்திற்கு கேந்திரம் திரிகோணம் ஆட்சி உச்சமாக கிரகங்களிருப்பார்பளானால் உத்தம பலன். சூரியன் நின்ற இராசிமுதல் 6 இராசி வரை உயிரென்றும் பிற்பாகம் உடல் என்றம் சொல்லப்படுகிறது. மேலும் நின்ற இராசிக்கு ஐந்தாம் இராசியிலுள்ள சுரமும் அதற்கு ஐந்தாமிராசியிலுள்ள சுரமும் பொருந்தி யிருப்பதுபோல அதற்கு மேல்வரும் ஒவ்வொரு ஐந்தாமிராசி சுரமும் ச-ம முறையாய் வருகிற தென்று இதன்முன் பார்த்தோம். அதுபோலவே நின்ற நரம்பிற்கு ஏழாவது இராசியிலுள்ள சுரங்கள் ச-ப முறையாய்ப் பொருந்தி வந்திருக்கிற தென்றும் கவனித்தோம். இம்முறையையே சோதிட நூலோர் கேந்திர தரிகோணங்களாக வழங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொட்ட இராசிமுதலும் சங்கீத நூலோர் தொட்ட இராசியை நின்ற இராசியாக வைத்துக்கொண்டு அதற்குமேலும் கணக்கிட்டிருக்கிறார்கள் என்ற வித்தியாசத்தைத் தவிர வேறில்லை. நின்ற இராசிக்கு அப்புறம் ஏழாம் இராசியும் ஏழாம் இராசிக்கு அப்புறம் ஏழாம் இராசியும் சுரங்களுக்கு எண்ணப் படுகின்றன. ஆனால் சோதிடத்திலோ தொட்ட இராசியைச்சேர்த்து ஏழாம் இராசியும் ஏழாம் இராசியைச் சேர்த்து அடுத்த ஏழாம் இராசியுமாகக் கிரகங்களுக்குக் கணக்கிடப்படுகின்றன. அடியில் வரும் செய்யுளாலும் அதன் உரையாலும் இவ்வுண்மையறிக. சினேந்திரமாலை, காண்டப் பொழிப்பு பக்கம் 17. "ஐந்துமதற் கைந்து மதற்கைந்து மென்னுமிவை யைந்தொன்ப தோடுதய மாகுமே-முந்திய கோண முதயமைந்தென் கோணமிரண் டொன்பஃதென் கோணமூன் றாகக் குறி" (இ-ள்) கோணங்களாவது ஐந்தாமிராசியும் ஐந்தாமிராசிக்கு ஐந்தாமிராசியும், ஐந்தாமிராசி ஐந்தாமிராசிக்கு ஐந்தாமிராசியுமாம். இவைமுறையே ஐந்தாமிராசி ஒன்பதாமிராசி உதயவிராசி என்கின்றனவாம். இவற்றில் உதயவிராசியை முதற்கோணமென்றும் ஐந்தா மிராசியை இரண்டாங் கோணமென்றும ஒன்பதாம் இராசியை மூன்றாங்கோணமென்றுஞ்சொல்லப்படும். "எழுவதற்கு நான்காகு நீர்க்கீ ழிதற்குப் பழுதின்றிப் பாடுநான் காகும்-வழுவின்றி யுச்சியத னான்கா மதற்குதய நான்கென்ப விச்சைகொணா கண்டத் தியல்" (இ-ள்) கண்டங்களாவது நான்காமிராசியும் நான்காமிராசிக்கு நான்காமிராசியும் நான்காமிராசி நான்காமிராசிக்கு நான்காமிராசியும் நான்காமிராசி நான்காமிராசிக்கு நான்காமிராசியுமாம. இவை முறையே நான்காமிராசி ஏழாமிராசி பத்தாமிராசி உதய விராசிஎன்கின்றனவாம். இவற்றில் உதயவிராசியை உதயகண்ட மென்றும், நான்காமிராசியை நீர்க்கீழ்க்கண்டமென்றும், ஏழாமிராசியைப் பாட்டுக்கண்டமென்றும் பத்தாமிராசியை உச்சிக்கண்டமென்றும் சொல்லப்படும்". மேற்கண்ட செய்யுள்களில் நாலு நாலாகச்செல்லும்பொழுது கிடைக்கும் 4, 7, 10, 1 என்னும் சேந்திர ஸ்தானங்களையும், ஐந்து ஐந்தாய்ப் போகும் பொழுது கிடைக்கும் 5, 9, 1 என்னும் திரிகோணஸ்தானங்களையும் சொல்லுகிறார். நாலாம் இராசி நட்பு நரம்பென்றும் அதின் படியே ச-க, ச-க வாக சுரங்கள அமைகிறதென்றும் ஐந்து ஐந்தாய்ப போவது கிளை நரம்பென்றும் அதின் படியே ச-ம, ச-ம வாகப்போவது ஒருஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்களையும் கண்டு பிடிப்பதற்கு ஏற்ற அளவாயிருக்கிறதென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். இதைப்போலவே ஏழும், அதற்கேழும், ஏழுமாகப்போவது ச-ப முறையாம். இதுவும் ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு சுரங்களைக்கண்டு பிடிப்பதற்கு முதன்மையாயிருக்கிறது. இவ்வேழாமிடத்தை வண்ணப்பட்டடை என்று இளங்கோவடிகள் சொல்லுகிறார். வண்ணம் என்பது நிறம் எழுத்து என்று பொருள்படும். இங்கே வர்ணமென்று ஏழுசுரங்களைக் குறிப்பாகச் சொல்லுகிறார். மேலும் சோதிடத்தில் தொட்ட இராசியையும் சேர்த்து நாலு நாலாய், ஐந்து ஐந்தாய், ஏழு ஏழாய்ப் போவது வழக்கமாயிருக்கச் சங்கீதத்தில் தொட்ட இராசியை நீக்கி ஏழும் ஏழாமிடத்திற்கு மேல் ஏழும் வருகிறதேயென்று நாம் நினைப்போம். ஆனால் சங்கீதத்தில் ஆரம்பித்த இடத்தை நின்ற நரம்பாக்கிக்கொண்டு அதன்மேல் கணக்கிடுகிறார்கள். மேருவில் நின்ற நாதம் சட்ஜம் என்று சொல்லப்படும். இதை உயர்வாயும் தணிவாயும் அவரவர்கள் சாரீரத்திற்கேற்றதுபோல் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். ஆகையால் இதை நின்ற சுரமாக்கிக்கொண்டால் அதற்கு மேல்வரும் சுரம் ஒவ்வொன்றும் நின்ற சுரத்தோடு பொருந்திநிற்கும் முறையைச் சொல்வதினாலும், நின்ற சுரத்திற்கு ஓசையின் இருமடங்காக மத்தியஸ்தாயியின் முடிவில் ஒரு சுரம் வருவதினாலும், மந்தரஸ்தாயியின் முடிந்த ஸ்தான மாகிய சட்ஜமத்தை முடிந்த சுரம் அல்லது நின்றசுரம் என்று சொல்வது நியாயந்தானென்று நினைக்கிறேன். இடபம் முதற்கொண்டு சுருதிகள் தற்காலத்திலும் கணக்கு சொல்லப்படுவதைக் காண்கிறோம். இதுதவிர சோதிடத்தில் ஏழாம் வீட்டின் பலன்சொல்லப்படும்பொழுது, அதற்குக் குடும்பஸ்தானமாகிய எட்டாம் வீட்டின் பலனை அனுசரித்தே சொல்லப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதோடு கூட ஏழாமிடத்திற்கு ஏழாமிடமாகிய லக்கினஸ்தானத்தின் பலன் சொல்லப்படும் பொழுது லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தின் வலுவை அனுசரித்தே பலன் சொல்வது வழக்கம். ஏழாமிடத்திற்கு அதாவது களத்திரஸ்தானத்திற்குரிய பலனை ஏழாமிடத்தின் குடும்பஸ்தானமாகிய எட்டாமிடத்தைக் கொண்டும் களத்திரஸ்தானத்திற்கு களத்திர ஸ்தானமாக நின்ற புருஷனுடையஸ்தானத்திற்குரிய பலனை அதற்கு குடும்பஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைக்கொண்டும் சொல்வது வழக்கமா யிருக்கிறது. ஒருவனுக்கு மனைவி எப்படி யிசைந் திருப்பாளென்பதும் குடும்பத்தை எவ்வாறு நடத்து வாளென்பதும், ஒருமணவாட்டிக்கு மணமகன் எவ்வாறு இசைந்திருப்பானென்பது அவன் குடும்பத்தை எப்படி நடத்துவானென்பதும் போன்ற எல்லாப் பலன்களையும் அறிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. இதுபோலவே 1, 2, 3, 4 என்ற பாவங்களையும் அதனதன் குடும்பஸ்தானத்தைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ளலாம்.குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டின் பலனை அதற்குக் குடும்பமாகிய மூன்றாம் வீட்டைக் கொண்டு அறியலாம். வித்தியா ஸ்தானமாகிய நாலாம் வீட்டின் பலனை அதற்கு நாலாம் வீடாகிய ஏழாம் வீட்டைக் கொண்டும் ஒன்பதற்கு அதற்கு ஒன்பதைக் கொண்டும், பத்திற்கு அதற்குப் பத்தைக் கொண்டும் பலன் சொல்வது வழக்கத்திலிருக்கிறது. அப்படியே ஐந்திற்கு ஐந்தாய் அதன்மேல் ஐந்தாய் வரும் ச-ம பொருத்தமுள்ள பன்னிரண்டு சுரங்களும் ஒன்றற்கொன்று படிப்படியாய் உயர்ந்து ஒரு ஸ்தாயியில் ஒழுங்குபட்டு நிற்கின்றன. அதுபோலவே ஏழும் அதன்மேல் ஏழும் அதன்மேல் ஏழுமாய் வரும் ச-ப என்னும் இணைச்சுரம் ஒரு ஸ்தாயியில் பன்னிருமுறை உயர்ந்து 12 சுரங்களையும் கொடுக்கிறது. மேலும் ஒரு இராசி வட்டத்தில் எடுத்துக் கொண்ட ஒரு லக்கினத்திற்கு 1, 2, 3, 4 முதலிய பாவங்களுக்குப் பலன் வெவ்வேறாயும் இராசிகளில் லக்கினம் மாறும்பொழுது பலன்கள். பாவப்படியும் நடந்துவருவது எப்படியோ, அப்படியே குரல் கிரகம் மாறும்பொழுது அந்த இராசியிலிருந்து தனக்குரிய இணை, கிளை, பகை, நட்பு என்ற பொருத்தத்தோடு பொருந்தி நிற்கிறது. இதன்முன் "ஆழியுமாரும் போற்கீறிச் சிறுதிகைக்கண்" என்னும் செய்யுகையும் அதன் அர்த்தத்தையும் 685ம் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். அதேவிதமாக, இதன் முன்னுள்ள வட்டப்பாலைச் சக்கரங்கள் யாவும் பன்னிரு இராசியாய்ப் பிரித்துக் காட்டப் பட்டிருக்கின்றன. என்றாலும் சோதிட முறைப்படி அடியில் வரும் சக்கரத்தையும் நாம்கவனிக்க வேண்டியது. இதில் மேடமாதியாக மீனமீறாக கதிர், சேய், பொன், மால், புகர், சனி, மதி, பாம்பு என்னும் கோட்கள் வலவோட்டாக நிற்பதை இரண்டாம் வரிசையில் காண்கிறோம். அதுபோலவே இடபம் ஆதியாக இடவோட்டாக கதிர், தூமம், பாம்பு, மதி, சனி, நுட்பம், புகர், இந்திரதனுசு, மால், பொன், சேய், பரிவேடம் என்னும் தூமாதி கரந்துறைக் கோட்கள் மிதுனம்வரை நிற்பதையும் மூன்றாம் வரிசையில் காண்கிறோம். மேற் சக்கரத்தில் காட்டிய விஷயங்களை அடியில்வரும் செய்யுட்களில் காணலாம். சினேந்திரமாலை காண்டப் பொழிப்பு, பக்கம் 40. "கதிர்சேய்பொன் மாலோன் புகர்சனியுங் கற்றை  மதிபாம் பறுதியாய் வைத்து-மதியார்  கதிராதி காலங்கொண் டேழரையா லொட்ட  லதிராத வெண்கோட்கு மாம்." (இ-ன்) கதிர் சேய் பொன் மால் புகர் சனி மதி பாம்பு ஆகிய ஆரூடக்கோட்கள் எட்டையும் நிறுத்த முறையே உதித்தொரு சாமத்திற்கு கிழக்கு முதலிய திக்குகள அ- லேயும் 2- ஞ்சாமத்திற்கு தென்கிழக்கு " " " " 3 " தெற்கு " " " " 4 " தென்மேற்கு " " " " 5 " மேற்கு " " " " 6 " வடமேற்கு " " " " 7 " வடக்கு " " " " 8 " வடகிழக்கு " " " " வலமுறையாகநிறுத்துவதாம்.   சினேந்திரமாலை காண்டப்பொழிப்பு பக்கம் 42. "இரவி யெழுதூமம் வாளரவ மிந்து பரவுசனி நுட்பம்பார்க் கோனாம்-விரவிய வில்லோடு மால்பொன்சேய் வேடமிவை யீராறு நல்கடிகை யவ்வைந்தாய் நாட்டு" இ-ன். கதர் தூமம் பாம்பி மதி சனி நுட்பம் புகர் இந்திரதனுசு மால் பொன் சேய் பரிவேடம் ஆகிய ஆருடக்கோட்கள்-12 யும்-நிறுத்த முறையே உதித்து ஒருவட்டத்திற்கு ரிஷபம் முதலிய இராசிகள் லேயும் 1 " மேஷம " " " 2 " மீனம் " " " 3 " கும்பம் " " " 4 " மகரம் " " " 5 " தனுசு " " " 6 " விருச்சகம் " " " 7 " துலாம் " " " 8 " கன்னி " " " 9 " சிம்மம் " " " 10 " கடகம் " " " 11 " மிதுனம் " " " "இட முறையாய் நிறுத்துவதம். எ. று. இந்த ஆரூடக் கோட்கள் கரந்து உறைகின்றமையால், இவற்றைத் தூமாதிக்கரந்துறைகோட்கள் என்று பெயர் வழங்குகின்றனர். கரந்து உறைதலாவது, இல்லை. போல விருத்தலாம். "கதிர்முதற்பாம் பீறாகக் காட்டியவெண் கோட்க டுதிதருநீ கானமுதற் றோன்றி-விதியே யிடம்வரும் வாராதி யெல்லாரும் பின்ன  ரடையவரு மூன்றேமுக் கால்" இ-ள். கதிர், சேய் பொன் மால் புகர் சனி ம தி பாம்பு ஆகிய ஆருடக் கோட்கள் 8-யும் நிறுத்த முறையே அவற்றைவாராதிபன்முதலாக உதித்து ஒருமுகூர்த்தத்திற்கு வடகிழக்கு முதலிய திக்குகள 8-லேயும் 1        " வடக்கு " " " 2        " வடமேற்கு " " " 3        " மேற்கு " " " 4        " தென்மேற்கு " " " 5        " தெற்கு " " " 6        " தென்கிழக்கு " " " 7        " கிழக்கு " " " மற்றுமுள்ளமுகூர்த்தம் 8-ற்கும் முன்போல திக்குள் 8 லேயும் இடமுறையாக நிறுத்துவதாம். எ - று. உதித்தொருமுகூர்த்தத்திற்கு வாராதிபன் வடகிழக்கே நிற்பதாவது மீனம்4-காற்களுங் குடும்பம்பின் 2-காற்களுங் கொண்டுமீனத்தில் நிற்பதாம். மற்றவையும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. இந்த ஆருடக்கோட்கள் வாராதிபனை முதலாகக்கோடலால் இவற்றை வாரக்கோட்கள் என்று பெயர்வழங்குகின்றனர். முகூர்த்தமாவது 3(3/4) நாழிகை கெகண்டுள்ளகாலமாம். இதில் கதிர், சேய், பொன் முதலிய வாரக் கோள் வலமுறையாகவும் கதிர், தூமம், பாம்பு முதலிய கரந்துரை கோட்கள் இடபமுதலிய இராசிகள் பன்னிரண்டிலும் இடமுறையாகவும் சஞ்சரிப்பதைச் சொல்லுகிறார். ஒரு நாளைக்கு 8 சாமம் என்று பிரித்து அவ்வெட்டுச்சாமங்களிலும் கதிராதி வாரக்கோட்கள் ஒருவர் நிலையில் ஒருவராக வலமுறையில் சஞ்சரிப்பதையும் தூமாதி கரந்துறை கோட்கள் பன்னிரண்டும் ஒரு நாளின் நாழிகையை 12 பாகங்களாகப்பிரித்து மேடாதியாக இடமுறையில் சஞ்சரிக்கும் விதத்தையும் சொல்லுகிறார். வாரக்கோட்கள் ஒவ்வொரு வாரத்திலும் கிரகம் மாறிவருவதையும் கரந்துறை கோட்கள் இடமுறையாக மாறிவருவதையும்பற்றி மிக விஸ்தாரமாய் அங்கே சொல்லப்படுகிறது. இம்முறையைப் போலவே ச ரி க ம ப த நி என்ற ஏழுசுரங்களும் ச-ப முறையாய் வலமாக இணங்கி நிற்பதையும் ச-ம முறையில் இடமுறையாக அவைகளே இணங்கி நிற்பதையும் இதன்முன் பார்த்தோம். வலமுறை செல்லும் ச-ப முறை குழலிடத்து இடமுறை செல்லும் ச-ம முறை யாழிடத்தும் என்று சொல்வதை நாம் கவனிக்கையில் இன்னும் அரிய விஷயங்கள் தொகுத்து நிற்கிறதென்று நினைக்க இடமிருக்கிறது. அப்படியே இராசியின் எதிர்கயிறுகள் சொல்லுமிடத்து நின்ற இராசிக்கு எதிர் நின்ற இராசி ஆறாம் இராசி ஆகிறது. தொட்ட இராசியில் நின்ற சுரத்திற்கு ஆறாவது நரம்பு பகை நரம்பென்று சங்கீதத்தில் விலக்கப்படுகிறது. அதன்படியே விளரிக்குக் கைக்கிளை எதிர் நின்ற இராசியாம். அதையே பகை இராசி என்றோம். இதையே எதிர் கயிறு என்று சொல்லுகிறார். இப்படி எந்த எந்த விஷயங்களை சோதிடத்திற்கும் சங்கீதத்திற்கும் பொருத்தம் வைத்திருப்பார்களோ நாம் அறியோம். என்றாலும் சோதிட சம்பந்தமாகப் பொருந்தி நிற்கும் சில அம்சங்களை இதன்பின் பார்ப்போம். ஒரு ஸ்தாயியின் ஒன்று இரண்டாய் ஆரம்பித்த சுரங்கள் பன்னிரண்டாமிடமாகிய மேருஸ்ஸாாத்தில் லயத்தையடைகின்றன. இப்படியே எந்த இராசியைத் தொட்டாலும் அதற்குப் பன்னிரண்டாமிடம் மோட்ச ஸ்தானமென்று நாம் அறியவேண்டும். மோட்ச ஸ்தானத்தில் நிற்கம் சரத்தின்மேல் ஏழாமிடத்தில் இணைச்சுரம் நிற்கும் என்பதை முன் பார்த்தோம். இதுவே களத்திரஸ்தானமாம். இதுவே தொட்ட சுரத்திற்கு இன்பத்தை விளைவிக்கும் ஸ்தானமாம். இந்த ஏழாமிடத்திற்கு மேல் வரும் ஏழாமிடமும் ஏழழமிடத்திற்கு மேல்வரும் ஏழாமிடமு அதற்குக் களத்திர ஸ்தானமாம். சட்ஜமத்தின்மேல் ஆறாவது இடம் சத்துருஸ்தானமாம். இதிலுள்ள உழையின் நாலாவது அலகும் துத்தத்தின் இரண்டாவது அலகும், குரல் இளியோடு பொருந்தாமல் துன்பம் தருவதால் இதைச் சத்துரு ஸ்தானம் என்கிறார். சத்துருஸ்தானம் என்றால் சத்துரு, வியாதி, சண்டை, சேதம், துன்பம் முதலியவைகளைப்பற்றிச் சொல்லு ஸ்தானம். அப்படியே சட்ஜமத்திற்குப் பகையாயுள்ள அல்லது தொட்ட சுரத்திற்கு ஆறாவதாயுள்ள இராசியில் நின்ற சுரங்கள் பண்ணோடு சேராமல் துன்பம் செய்யும். மேருவில் நின்ற குரலுக்கு அதற்குமேல் ஐந்தாவது இராசியில் நின்ற சுரங்கள் புத்திர ஸ்தானத்தில் நிற்கிறதாகக் காண்போம். ஐந்தாமிடத்தைப் புத்திர ஸ்தானமென்று சொல்வதுபோல் அவ்விடத்தில் நின்ற சுரத்தைக் கிளைச்சுரமென்கிறார். மரத்தினின்று கிளைகள் உண்டாவதுபோல் சட்ஜமத்தினின்று வேறு சட்ஜம் பிறப்பதினால் இதனைக் கிளைச்சுரமென்றும் புத்திர சுரமென்றும் சொல்வது மிகுந்த பொருத்தமானதே. மேருவிற்குமேல் நாலாமிடத்தில் நட்புச்சுரம் நிற்கும் என்கிறார். இந்நட்புச்சுரத்தை நாம் கவனிப்போமானால் நாலாமிடம் மாதுரு, வித்தை, வாகனம், மனை, பூமி, தெய்வம் முதலியவைகளைப்பற்றிச் சொல்லுமிடம். இதை மாதுர் ஸ்தானமென்றும் வித்தியா ஸ்தானமென்றும், வாகன ஸ்தானமென்றும் சொல்வது வழக்கம். அப்படியே மேருவில் தோன்றிய சட்ஜமத்திற்கு மாதுர் ஸ்தானம்போல் கைக்கிளை நிற்கிறது. இதன் கீழுள்ள மூன்றாவது ஸ்தானம் வீரிய ஸ்தானமென்றும் சகோதர ஸ்தானமென்றும் சொல்லப்படுகிறது. சட்ஜமத்திற்கு மூன்றாமிடத்தில் வரும் கைக்கிளையைப் பகையென்கிறார். இரண்டாமிடத்தைத் தன குடும்ப நேத்திர ஸ்தானமென்று சோதிடமுறையில் சொல்வதுபோல் இதில் வரும் சுரம் ஆரம்ப சுரமாகிய சட்ஜமத்திற்கு இன்றியமையாதிருக்க வேண்டிய சுரமென்று தோன்றுகிறது. இந்த சுரம் சட்ஜமத்திற்கு நேத்திரம்போல் இருக்கிறது. பன்னிரண்டாம் இடத்திற்குப் பக்கத்திலுள்ள முதலாம் இடமும் அதிக முக்கிய மல்லாத பொதுஸ்தானம் போல் தோன்றுகின்றது. ஏழாமிடத்திற்கு மேலுள்ள எட்டாமடம் மரண ஸ்தானம். அது வியாதி, துன்பம், நஷ்டம், பகை முதலியவைகளைக் குறிக்கும் இடம் என்றபடி மேருவினின்ற சட்ஜமத்திற்கு, 8-ஆம் இடத்திலுள்ள விளரி பொருந்தாதாம். ஒன்பதாமிடத்தைக்கொண்டு பிதுர், குரு, அருள், கல்வி, குணம், தவம், ஒழுக்கம், செல்வம் சொல்லலாமென்ற முறைப்படி தோன்றிய சுரத்திற்கு 9-ஆம் இடத்திலுள்ள 4 அலகுள்ள விளரி பிதுர்ஸ்தானம் போல் விளங்குகிறது பத்தாமிடத்தைக்கொண்டு கர்மம், பிரதாபம், ஆளுகை, வீடுகள், பட்டணங்கள், கோவில், குளங்கள், பக்தி, ஞானம், ஜீவனம் சொல்வதுபோல் சட்ஜமத்திற்கு மேலுள்ள பத்தாமிடத்தில் இரண்டலகுள்ள நிஷாதமுமிருக்கிறது. பதினோராமிடம் முதலாமிடத்தைப் போலவே ஆயஸ்தானமாய் நிற்கிறது. இதை லாபஸ்தான மென்று சொல்லுகிறோம். இதில் நாம் ஒன்று கவனிக்கவேண்டும். ஒன்று, நாலு, ஏழு முதுலிய கேந்திரஸ்தானங்களும் ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோணஸ்தானமு இரண்டு பதினொன்றாகிய பணபரஸ்தானமும் நல்ல ஸ்தானங்களென்று சோதிடத்தில் சொல்லப்படுவது போலவே சங்கீதத்திலும் சட்ஜமத்திற்கு இரண்டாமிடத்திலுள்ள நாலு அலகுகளுள்ள இடபமும் நாலாமிடத்தில் நாலு அலகுள்ள காந்தாரமும் ஐந்தாமிடத்தில் இரண்டு அலகுள்ள மத்திமமும் ஏழாமிடத்தில் இணை சுரமாகிய பஞ்சமமும் ஒன்பதாமிடத்தில் நாலு அலகள்ள தைவதமு பதினோராமிடத்தில் நாலு அலகுள்ள நிஷாதமுமாக வந்து ஒரு ஆரோகணத்திலுள்ள சப்த சுரங்களாய்ச் சகல பொருத்தங்களோடு நிற்பதை நாம் கவனிக்கவேண்டும். இப்படியே மூன்றாம் இராசியாசிய சிம்மமு ஆறாம் இராசியாகிய விருச்சகமும் எட்டாம் இராசியாகிய மகரமும் பத்தாம் இராசியாகிய மீனமும் பகைக்ஷேத்திரங்களாகச் சொல்லப்படுகின்றன. மூன்று, ஆறு, எட்டு முற்றிலும் பகையாம். இதுபோலவே மூன்று, ஆறு எட்டில் வரும் சுரங்கள் பகைபெற்று நிற்பதை நாம் கவனிக்கவேண்டும். சுபர்கள் 4, 7 என்ற கேந்திரங்களிலும் 5, 9 என்ற திரிகோணங்களிலும் நின்றால் உத்தமம் என்பது போல 4, 5, 7, 9 என்ற இராசிகளில் பொருத்தமுள்ள சுரங்கள் நிற்பதை நாம் பார்க்கிறோம். எல்லாக்கிரகங்களும் ஐந்து ஒன்பதிற்கு அதிபரானால் அவர் பாவிகளாயிருந்தாலும் சுபர்களாயிருந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பார்கள் என்பதுபோல் ஆரம்ப சுரமாகிய குரலுக்கு ஐந்தாம் இராசியில்நின்ற சுரம் புத்திரஸ்தானமாக அதற்கு நாலாம் இராசியாகிய நட்பு நரம்பு சட்ஜமத்திற்குப் பிதுர் ஸ்தானமாகப் பொருந்தி நிற்கிறது. மூன்று, ஆறு, எட்டுக்கு அதிபராக வரும் கிரகங்கள் துன்பப் பலனைக் கொடுப்பார்கள் என்பது போலவே மூன்று, ஆறு, எட்டு, என்னும் நரம்புகள் பகை நரம்புகளாக வருவதை நாம் காண்கிறோம். எல்லாக் கிரகங்களும் தாங்கள் நிற்கு மிடத்திற்கு ஏழாம் இடத்தைப் பார்க்கும் என்பது போல் எல்லாச் சுரங்களும் தாங்கள் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியைப் பார்க்கின்றன அல்லது இணைந்திருக்கின்றன. மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டு மறைவு ஸ்தானங்களென்று சொல்லப்படுகிறது போலவே தொட்ட சுரத்திற்கு மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டு இராசிகளில் நிற்கும் சுரங்கள் மறைவாம் அல்லது ஒடுக்கமாம். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் என்ற நாலு இடங்கள் நல்ல இடங்கள் அமைவதுபோல ஒவ்வொரு சுரத்திற்கும் அமைகிறது. ஏழாமிடமும், நாலாமிடமும் சேந்திரங்களாகவும் நீசராசிக்கு ஏழாம் இராசியில் நிற்கும் சுரம் உச்சமாகவும் ஐந்தாமிடம் திரிகோணமாகவும் மேருஸ்தானம் ஆட்சியாகவும் இரண்டாமிடம் குடும்ப ஸ்தானமாகவும் அமைகிறது. சூரியன் நின்ற இராசி முதல் ஆறு இராசி உயிரென்றும் அதன் மேல் ஆறு இராசி உடலென்றும் சொல்லப்படுவதுபோல சட்ஜம பஞ்சம முறையிலுள்ள சுரங்கள் உயிரென்றும் அதற்குமேல் ப-ச அல்லது ச-ம விற்குப்பட்டசுரங்கள் தேகமென்றும் கொள்ளவேண்டும். நாலாமிடமாகிய மாதுருஸ்தானமும், ஒன்பதாமிடமாகிய பிதுர்ஸ்தானமும், ச-க, ச-ம போல் இணைந்து நிற்பதையும், ஐந்தாமிடமாகிய புத்திரஸ்தானமு, ஒன்பதாமிடமாகிய பிதுர்ஸ்தானமு ச-க போல் பொருந்தி நிற்பதையும், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், வீடாகிய மோட்சஸ்தானத்தோடு பன்னிரண்டாமிடத்தோடு ச-ம போல் பொருந்தி நிற்பதையும், குடும்ப ஸ்தான மாகிய இரண்டாமிடத்தோடு களத்திரஸ்தானமாகிய ஏழாமிடம் ச-ம போல் பொருந்தி நிற்பதையும், ஒரு ஸ்திரி பொருள் சேர்க்கவிரும்புவதுபோல, களத்திரஸ்தானத்திற்கு 11ஆம் இடமாகிய லாபஸ்தானம் நட்பாய் நிற்பதையும் காண்போம். நின்றகுரலுக்கு 5ஆம் இடம் புத்திரஸ்தானமானது போல 7ஆம் இடமாகிய களத்திர ஸ்தானத்துக்கு நின்றகுரல் புத்திரஸ்தானமாகிறது. இதுபோலவே ச-ம, ப-ச கிளைநரம்பாயிருக்கிறது என்று நாம் காணலாம். எப்படி ஒருமனிதன் 2 தன குடும்பத்தோடும், 4 மாதாவோடும், 5 மக்களோடும், 7 மனையாளோடும், 9 தந்தையோடும், 11 தனலாபத்தோடும், 12 தன்வீட்டோடும் பொருந்தி நிற்பானோ, அப்படியே ஆரம்ப சுரம் தனக்குப் பின்வரும் ரி-க-ம-ப-த-நி என்னும் ஆறு சுரங்களோடும் பொருந்தி நிற்பதாகக்காண்போம். இவைகள் யாவையும் நன்கு அறிந்தே நம் முன்னோர்கள் வட்டப்பாலைச்சக்கரம் கூறியிருக்கின்றார்கள். அஷ்ட வர்க்க பிந்து பரிசோதனை கணக்கினால் கிரகங்களின் ஸ்தான வலு அறிந்து ஸ்தானபலங்களைச் சொல்லுவதெப்படியோ, அப்படியே ஒரு இராகத்தையுண்டாக்கவும் பிழையறப்பரிசோதிக்கவும் வழி செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதை இராகங்களைப்பற்றிச் சொல்லும் இரண்டாவது புத்தகத்தில் காண்போம். இவ்வளவு அரிய உண்மைகள் சிலப்பதிகாரததின் சில அடிகளில் சொல்லப்பட்டிருக்கிற தென்ற நாம் காண்கையல், இசைத்தமிழையே சொல்லவெழுந்த அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம் முதலிய முதற்சங்க நூல்கள் எப்டி யிருக்குமோ, எத்தனை அரிய விஷயங்கள் அவற்றில் சொல்லப்பட்டிருக்குமோ நாம் காணக் கொடுததுவைக் வில்லையேயென்று வருத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. என்றாலும் சங்கீதத்திற்கு உயிர்போன்ற சில முக்கிய இரகசியம் இரண்டாம் புத்தகத்திற் சொல்லப்படும்.  
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 9:04:48 AM


உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf



மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது.



சூரியன் கார்த்திகை நட்சத்திரம்1,2,3,4 பாதத்தில்இருந்தால் #tamil#astrology#natchathirapalan#shorts