|
என்ன செய்தார்கள் என் தாய் தந்தையர் சொத்தும் இல்லை சுகமும் இல்லை என்றெல்லாம் மனம் வெதும்பத் தேவையில்லை. மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட வாழ்க்கை முட்டுக்கட்டையும் நாம் ஏகாதசி விரதம் கடைபிடித்து மறைந்த பெரியவர்களுக்கு விரதத்தையே தானமாகத் தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்)
அவர்கள் சொர்க்கத்துக்குச் சென்று பரந்தாமனிடம் நம் குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள். எனவே இவ்வருடம் ஏகாதசி விரதம் இருந்து மறைந்த ஆத்மாவுக்கு விரத பலனைத் தானம் செய்யுங்கள். இனி வரும் காலமெல்லாம் இன்ப மயமாகவே அமையும். நரகத்தில் இருக்கும் மூதாதையருக்கும் நற்கதி கிடைக்கும்.
|