ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? |
நான்காம் வீடு கல்விக்கான இடம். ஐந்தாம்வீடு மனம் மற்றும் நுண்ணறிவிற்கான இடம். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். ஆகவே இந்த மூன்று வீடுகளையும் அலசினால், ஜாதகனின் கல்வியைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அதோடு அந்த வீட்டு அதிபர்கள், காரகன் புதனின் நிலைமைகளையும் நன்கு அலச வேண்டும்.
சூரியன் - தத்துவப் பாடங்கள், நிர்வாகப் படிப்புக்களுக்கு அதிபதி
சந்திரன் - மருந்துகள்
செவ்வாய் - அறுவை சிகிச்சைகள், விவசாயம்
புதன் - கணிதம்
குரு - இலக்கியம், வானவியல்
சனி - சரித்திரம், அரசியல் என்று கிரகங்களையும், அதன் கூட்டணிகளையும் வைத்து, ஜாதகன் படிக்கும் துறையை அல்லது என்ன படிப்பு அவனுக்கு ஒத்து வரும் என்பதையும் அலசலாம் |