108 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கங்கண சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. சூரியன் முழுவதுமாக மறைக்கப்படுவதே கங்கண சூரிய கிரகணம். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.
தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்கிறோம்.
சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம்
புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும். இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.
வளைய சூரிய கிரகணம் : சூரிய கிரகணங்களில் பல்வேறு வகைகள் உண்டு. சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. பூமி, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒவ்வொரு சூரிய கிரகண தினத் தன்றும் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வந்தால் கூட, தூரம், கோணம் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கும். இதனால்தான் எல்லா சூரிய கிரகணமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சூரிய கிரகணத்தின் போது, சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் போது, சந்திரனின் நிழல் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழும். அந்த நிழல் விழும் இடத்திலிருப்பவர்களுக்கு முழு சூரிய கிரகணம் தெரியும்.அந்த இடத்திலிருந்து தொலைவில் உள்ளவர் களுக்கு பகுதி சூரிய கிரகணம் தெரியும். அந்த பகுதியைத் தவிர்த்து பூமியின் மற்ற பகுதியில் சூரிய கிரகணம் தெரியாது.சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டிலும் நெருங்கியும் வரும் போது, பூமியைச் சுற்றும் சந்திரன், பூமியிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் உள்ள போது, சூரியனின் வட்டுப் பகுதியை சந்திரானால் முழுமை யாக மறைக்க முடியாமல் போகிறது. சூரியனின் மையப் பகுதியை மறைக்கும் சந்திரனால் விளிம்புப் பகுதியை மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது வளைய சூரியகிரகணம் ஏற்படுகிறது. இது கங்கண சூரிய கிரகணம் என்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது
|