| புளூட்டோ கிரகம் நீக்கம்: ஜோதிடகணிப்பில் பாதிப்பு வராது |
| புளுட்டோ, கிரக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் ஜோதிட கணிப்பில் பாதிப்பு எற்படாது என்று பிரபல ஜோதிடர் காழிïர் நாராய ணன் கூறினார். 1930-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி கிளைட்டாம்பாக் என்ற விஞ்ஞானியால் கண்டு பிடிக்கப்பட்ட புளுட்டோ கிர கம் பூமியைச் சுற்றி வரும் 9 கிரகங்களில் ஒன்றாக இதுவரை கருதப்பட்டு வந்தது.
நேற்றுமுன்தினம் செக்குடியரசு தலை நகர் பிராக்கில் கூடிய வானியல் விஞ்ஞானிகள் ப்ளுட்டோவில் மிகக்குறைவான எடை, அதன் சூழற்சிபாதையில் குறுக்கிடுவது போன்றவற்றைக் கருதி அதன் கிரக அந்தஸ்தை நீக்கினர். இது ஜோதிட சாஸ்திரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துமா:-
விஞ்ஞான வளர்ச்சி அதிகம் இல்லாத காலத்தில் மருத்துவ உபகரணங்கள் அதிகம் தோன்றாத காலத்தில் கூட இப்போது உள்ளதை விட வியக்கதகு சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.
தற்காலத்தில் புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகள் தோன்றியிருப்பதால் பழைய அடிப்படை மருத்துவ தத்துவங்களை முற்றிலும் மறுக்க முடியாது. அதுபோலத்தான் வானியலில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப புதுபுதுப் கருத்துக்கள் அறிவிக்கப்பட்டாலும் அது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையை எந்த விதத்திலும் பாதிக்காது.
இது போன்ற புது கருத்துக்கள் ஜோதிடத்தின் துல்லியத்தை மேலும் அதிகரிக்கும் விஷயமாகும். எனவே ஜோதிடர்கள் விஞ்ஞான ரீதியிலான புதுபுது வானியல் கருத்துக்களை மனமுவந்து வரவேற்க வேண்டும்.
புளுட்டோ ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள முக்கியமான 9 கிரகங்களில் ஒன்றாக வராவிட்டாலும் அதன் சுழற்சியை பொருத்த கணக்கீடு ஜோதிடத்தில் கையாளப்படுவதை மறுப்பதற்கில்லை.
ப்ளுட்டோ எல்லா இடங்களிலும் ஜோதிடக் கணக்கிற்கு ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் அந்தந்த இடத்தின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் கிரகங்கள் அவ்விடத்திலிருந்து பார்க்கும் போது தோன்றும் கோணம் போன்றவற்றைப் பொருத்து ப்ளூட்டோவின் கணக்கீடு எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக கேரளாவில் ப்ளூட்டோவை மாற்றி என்ற பெயரில் அழைத்து கணக்கீடு செய்வார்கள்.
எனவே ப்ளூட்டோ கிரக அந்தஸ்து இழந்திருக்கிறது என்று சொல்லப்படும் கருத்து, அது இதுவரை கணக்கில் கொள்ளப்பட்டு வந்த இடங்கில் மட்டும் சிற்சிலமாற்றங்களை ஏற்படுத்தும். அப்பகுதியில் உள்ள ஜோதிடர்கள் விஞ்ஞான சொல்லும் இந்த மாற்றத்தைக் கணக்கில் கொண்டு தங்கள் ஜோதிட பலன்களை மேலும் துல்லியமாக்கிக் கொள்ளலாம்.
மனிதனின் வாழ்க்கை பலன்கள் அனத்தும் சூரிய மண்டலத்தையேச் சாந்துள்ளன. எனவே அவர்களின் எதிர்கால பலன்களை தீர்மானிக்க நம் முற்கால ரிஷிகள் கண்டுபிடித்து வைத்திருக்கும் 9 கிரகங்களே போதுமானது.
வானமண்டலத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எவ்வளவோ நடத்சத்திரங்களும், கிரகங்களும் உள்ளன. எனவே ஒவ்வொரு முறையும் புதுபுது கிரகங்கள், நடத்சதிரங்கள் கண்டுபிடிக்கப்படும் போது ஜோதிட நம்பிக்கைகளை சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. 100 கோடி பேருக்கு மேல் இந்தியாவில் இருந்தாலும் அவர்களின் பிரதிநிதிகளாக 534 பேரைத்தானே பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறோம்.
அது போலத்தான் இதுவும் ஜோதிடத்தில் இரண்டுபிரிவு உண்டு. ஒன்று கணக்கு மற்றொறு வானியல் கணக்கு என்றுமே மாறாது. வானியலில் தான் அவ்வப்போது மாற்றங்கள் தோன்றும்.
அந்த மாற்றங்கள் ஜோதிடத்தின் துல்லியத்தை மேலம் அதிகரிக்கும் என்பதால்வரவேற்கக்கூடிய மாற்றம் தான்.
பஞ்சாங்கத்தில் வாக்கியம், திருக்கணிதம் என்ற இரண்டுவகை உண்டு. வாக்கியம் என்பது பூர்வாங்கமானது. திருக்கணிதம் வழக்கியலில் உருவானது.
சந்திரனின் சுழற்சியில் சில மாற்றங்களை உணர்ந்து உருவாக்கப்பட்டது தான் திருக்கணிதம். எனவே ப்ளூட்டோ கிரக அந்தஸ் இழப்பு திருக்கணித பஞ்சாயங்கத்தில் சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டியதை உணர்த்தலாம். ஆனால் அந்த மாற்றங்கள் துல்லியத்தை அதிகரிக்கப்பயன்படும் வரவேற்க தக்க மாற்றம் தான். |