| 12 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| தனஸ்தானமாகிய 2வது வீட்டில் விரயஸ்தானாதிபதியான 12வது வீட்டதிபதி இருந்தால். உங்கள் லக்னம் தனுசு என்றால் 12வது வீட்டதிபதியே பஞ்சமாதிபதியும் ஆகிறான். அதோடு அவன் 2வது வீட்டில் உச்சம் பெறுவதால் தனயோக பலனாக சுகசம்பத்துக்கள் சேர்க்கையும். அதிக சந்தோஷமும் கொடுப்பான். இல்லையேல் இந்த கிரஹ சேர்க்கை விசேஷமான தரித்திர யோகத்தைத்தான் கொடுக்கும். |