கும்ப லக்கினம்
யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
கும்பலக்கினம்தான் மென்மையான லக்கினம். சிம்ம லக்கினத்திற்கு நேர் எதிர் லக்கினம் அல்லவா? கும்ப லக்கினம்தான் நாயகிகளின் லக்கினம். சிம்ம லக்கினம் ஹீரோ லக்கினம் என்றால் கும்ப லக்கினம்தான் ஹீரோயின் லக்கினம். கும்ப லக்கினம்தான் நிறைவான லக்கினம். அதனால்தான் அதற்கு ரிஷிகள் நிறைகுடத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள். கும்பலக்கினப் பெண் கிடைத்தால் யோசிக்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள் கும்ப லக்கினப் பெண்கள் என்ன செய்வது? அவர்கள் சிம்ம லக்கினத்தைத் தேடிப்பிடிக்க வேண்டியதுதான். ஹீரோயின் ஹீரோவைத்தானே தேட வேண்டும்? கும்பலக்கின ஆடவர்கள் நிறைவான குணங்களை உடையவர்கள் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் மகிழ்ச்சி கொள்வாள்கும்பலக்கினத்தை குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து பார்த்தால் ஜாதகன் லக்கியானவன் (அதிர்ஷ்டமானவன்) அல்லது லக்கியானவள் அங்கே அமரும் குரு கும்பலக்கினத்தின் இரண்டாம் வீட்டின் பலனையும், பதினொன்றாம் வீட்டின் பலனையும் ஜாதகனுக்கு அள்ளி வழங்குவான். ஜாதகனுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், கையில் காசு தங்கும். செல்வம் சேரும். செய்யும் வேலைகளில் நல்ல பலன் இருக்கும் கும்பலக்கினக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஆம் வீடுகளில் சென்று அமரக்கூடாது! அமர்ந்தால் என்ன ஆகும்? கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு, குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு. ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை ஜாதகனுக்கு ஏற்படும். கும்பலக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டில் அமரும் குருபகவானால் அதிகப் பயன் இருக்காது. இரண்டும் மறைவிடங்கள் கும்பலக்கினத்திற்கு 4ஆம் இடமும், 9ஆம் இடமும் முக்கியமான இடங்கள். 4ஆம் வீடு சுகஸ்தானம், 9ஆம் வீடு பாக்கியஸ்தனம். இரண்டு இடங்களுமே சுக்கிரனின் வீடுகள். அங்கே சென்று குரு அமர்ந்திருந்தால் - அவருக்கு அது பகை வீடுகள். ஜாதகனுக்கு குருவினால் கிடைக்கும் பலன்கள் குறைந்துவிடும். அப்படி அமரும் போது கும்பலக்கினக்காரர்களுக்கு எந்த இரண்டு வீடுகளின் பலன் கள் குறையும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள் கும்ப லக்கினத்திற்கு 3ஆம் வீடும், 10ஆம் வீடும் குருவிற்கு நட்பு வீடுகள். அங்கே அமரும் குருவால் ஜாதகன் நற்பயன்களைப் பெறுவான். 3ஆம் வீடு தைரியம், மற்றும் சகோதரன் சகோதரிகளுக்கான இடம். பத்தாம் இடம் வேலை, மற்றும் தொழிலுக்கான இடம். அவைகள் குருவால் சிறப்புறும் கும்ப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனம். குருவிற்கு அது பகை வீடு அங்கே குரு அமர்ந்தால் ஜாதகனுக்கு ஐந்தாம் வீட்டின் அமர்ந்த குருவால் அதிகப் பலன்கள் கிடைக்காது.
|