குரு காரகத்துவம்
பெல்லி (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு, தொடை, வீட்டில் கடவுள் அறை, நீதிபதி, ஆசிரியர்,
வழங்குபவர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், கணக்காய்வாளர், வேதங்கள்,
கோயில்கள், Jeevakaraka (சொந்தமாக), தத்துவம், கடவுள், நீதிபதியே, மரியாதை, உண்மை,
பொறுமை, தன்னடக்கம்.
எல்லாவிதமான சுபம். பெரிய அளவிலான பணம். நேர்மை. சிந்தனை. சட்டபடியான ஆணை. பட்டு. பருத்தி. மஞ்சள் தொழில்கள். மிகப் பெரிய நிறுவனங்களின் கூலியாட்கள். கல்லீரல். தசைகள். மதகுருக்கள். தர்மர்த்தாக்கள். திருப்பனி குழுக்கள். கோயில் ட்ரஸ்டிகள். எல்லாவற்றிலும் கவரவம் பார்ப்பவர்கள். திருப்தியற்ற மனிதர்கள். ரகசியமாக பகையை தீர்த்துக்கொள்பவர்கள், சந்தோஷம். குழந்தை. பூர்வீகம். ஆச்சார்யன். மதகுரு. விந்து. ஜீவன். பழங்கள். பாரம்பரியமிக்க. உணவுகள். வம்சம். முப்பாட்டன். பிராமணன். தங்கம். பட்டாடை ஆண்களுக்கு உயிர். மதம். மதத்தன்மை. எமபயம் நீக்கும். தசைகள். கல்லீரல். புற்று. வயிற்றுப் பகுதி நோய்கள். மஞ்சள்காமாலை. தட்சிணாமூர்த்தி. இருந்தாலும் பார்த்தாலும் சுபம். எல்லாவற்றிற்கும் உயிர்,
ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில் வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில் அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில் குறைகள் ஏதும் இல்லை என்று அறிக
வேத நூல்கள் குருவை, பிரஹஸ்பதி என்று சொல்கின்றன. ஆசிரியன் என்று சொல்கின்றன. உங்கள் மொழியில் சொன்னால் வாத்தியார் அவர். தேவகுரு என்கின்ற இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. நன்மைகளை அள்ளித்தரும் தன்மையுடையவர் என்பதால் கிரகங்களில் அவர்தான் (நமக்கு) முதன்மையானவர்.
upiter is a karaka or indicator of fortune, wealth, fame, luck, devotion and faith, spirituality, charity, morality, meditation, mantra, children, magistrates, ministers, lawyers and leaders in government and religion. Jupiter represents sacred scripture, wisdom, benevolence and philosophy. Jupiter's most favored position is in the first. He does well both in the Kendra's and Angles, and the auspicious Trikonal Houses. His nature is KAPHA, or watery. His gemstone is Yellow Sapphire or Yellow Topaz and his metal is Gold. As a benefice planet he reaches full maturity the earliest of the 9 grahas at age 16. Worship of BRIHASPATI or GURU (Jupiter) Devata results in a cure from ailments affecting the stomach and helps one toward off his/her sins, helps him/her in gaining strength, valor, longevity etc. He grants the boon of father-hood to the childless, good education (Vidya). He is revered as the Guru of Devas, protector of the world and is considered SRESHTA (matchless) among the wise. Kind-hearted, he is considered the Loka Guru and dispenser of justice and can be known only by a proper study of the Vedas. Thursdays are considered to be the best day for the worship of Jupiter.
குரு பகவானின் சொந்த வீடுகள் இரண்டு: தனுசு மற்றும் மீனம் குரு பகவானின் உச்ச வீடு:கடகம் குரு பகவானின் நீச வீடு: மகரம் குரு பகவானின் நட்பு வீடுகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே! குரு பகவானின் பகை வீடுகள்: ரிஷபம், மிதுனம், துலாம், சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் குருவிற்கு 100% வலிமை இருக்கும். குருவுடன் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் அல்லது ஏழாம் பார்வையாக சந்திரன் பார்த்தாலும், அல்லது குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5ம் அல்லது 7ம் அல்லது 9ஆம் பார்வையாகச் சந்திரனைப் பார்த்தாலும் யோகம்தான் அதற்குப் பெயர் கஜகேசரி யோகம் (அவற்றிற்கான பலன்கள் யோகங்களைப் பற்றி நடத்தவுள்ள பாடங்களில் பின்னால் வரும். அதற்கான சிலபஸ் இப்போது இல்லை!) சம வீட்டில் இருக்கும் குருவிற்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் குருவிற்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் குருவிற்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த குருவிற்குப் பலன் எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. இங்கேதான், இந்த விஷயத்தில்தான் குரு மற்ற கிரகங்களில் இருந்து வேறு படுவார். நீசம் பெற்றாலும் அவர் நன்மையே செய்வார். எங்கே இருந்தாலும் நல்லவன் நல்லவன்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! நம் தாய் எங்கேயிருந்தாலும் நம் தாய்தான் இல்லையா? அதுபோல! உச்சமடைந்த குருவிற்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
குரு பகவானின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்: 0 பரல் இருந்தால்: உறவுகளை இழக்க நேரிடும் 1 பரல் இருந்தால்: உடற்கோளாறுகள், உடல் நலமின்மை 2 பரல்கள் இருந்தால்: எதிலும் பயஉணர்வு, உணர்ச்சி வசப்படும் தன்மை 3 பரல்கள் இருந்தால்: காது சம்பந்தப்பட்ட நோய்கள், சக்தி வீணாகுதல், அலைச்சல் 4 பரல்கள் இருந்தால்: அதிகமான நன்மையும் இல்லை, அதிகமான தீமையும் இல்லை 5 பரல்கள் இருந்தால்: எதிரிகளைத் துவசம்செய்யும் நிலை, எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி! 6 பரல்கள் இருந்தால்: சொத்து, சுகம், வண்டி வாகனம் என்று சுகமான வாழ்க்கை! 7 பரல்கள் இருந்தால்: அதீதமான அதிர்ஷ்டம், மகிழ்ச்சி உண்டாகும் 8 பரல்கள் இருந்தால்: செல்வாக்கு, புகழ், செல்வம் எல்லாம் கிடைக்கும்
குருவைப் பற்றிய மேலதிக விவரம். மொழிபெயர்த்து, அதன் பொருளைச் சிதைக்காமல் அப்படியே கொடுத்துள்ளேன். எளிய ஆங்கிலத்தில்தான் உள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தனித் தமிழ் ஆர்வலர்கள். அதைப் படிக்க வேண்டாம்! அவைகள் உபரித் தகவல்கள்தான். குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:
In the first house.: Magnetic personality, good grammarian, majestic appearance, highly educated, many children, learned, dexterous, long-lived, respected by rulers, philologist political success, sagacious, stout body, able, influential leader.
Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune, witty, good wife and family, eloquent, humorous, and dexterous.
Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family, miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good success, energetic, bold, taste for fine arts and literature, lived by relatives.
Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy, founder of charitable institutions, comfortable, good inheritance, good mother, well read, contented life.
Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight, high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted, a leader.
Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons, dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless. Seventh house.: Educated, proud, good wife and gains through her, diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture, virtuous wife, pilgrimage to distant places.
Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long life, mean, degraded, thrown with widows, colic pains, pretending to be charitable, dirty habits.
Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful, pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative, generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured, famous, high position.
Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth, conveyances, children, determined, highly principled, accumulated wealth, founder of institutions, good agriculturist, non-violent, ambitious, scrupulous.
Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability, good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat dependent, influential, many friends, philanthropic.
Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character, unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste, pious in after-life. மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின் சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை
ஐந்து இடங்களில், கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும் அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:
இரண்டாம் வீட்டில்: பணவரவுகள். ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திரபாக்கியம், புத்திர லாபம், பெண்சுகம்.
ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம் பணவரவுகள் அதிகரிக்கும் காலம்
ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்
பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறை வேறும் அந்த ஓராண்டு சஞ்சாரத்தில்! இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.
பொதுவாக, குரு, 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம் மற்றும் பதினோராம் இடம் ஆகிய இடங்களில். சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்குக் குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்கக் காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்
குருவின் சஞ்சார பலன்கள்! ஏழு இடங்களில் கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காது அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:
முதல் வீட்டில்: சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavourable circumstances.) நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள் உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்
. மூன்றாம் வீட்டில்: மனம், மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம் அல்லது பதவி மாற்றம். துன்பங்கள்
நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை! ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்
எட்டாம் வீட்டில்: துக்கம். மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள் பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம் பண நஷ்டங்கள்.
பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது தொலைவான இடம் சென்று வசித்தல், தனவிரையம். நிலைமாற்றம் போன்றவை இருக்கும் அந்த ஓராண்டு காலத்தில்
|