கெட்ட யோகம்
பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!
அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.
பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன். அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
|