|
ராகு தசை நடப்பவர்களும் ராகு தோஷம் உள்ளவர்களும் பரிகாரம் செய்ய இவ்விரதம் இருப்பார்கள். இதனைக் சனிக்கிழமை இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து காளி கோவிலுக்கு சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர் அர்ச்சனையும் உளுந்தினால் செய்த பலகாரமும் நிவேதினம் செய்ய வேண்டும். நவக்கிரக சன்னதியில் வழிபட்டு ராகுபகவானுக்கு மந்தார மலர் மாலையிட்டு.
"வாகு நெடுமாரர் முன்னம் வானவர்க கமுதமீய
போடுமக்கா லையுன்றன் புணர்பினாற் சிரமே யற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன். பரசன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சப்பாய் ரட்சியப்பாயே"
என்னும் கேத்திரத்தைப் பாட வேண்டும். கருப்பு ஆடையும். உளுந்தினால் செய்த பணியாரங்களையும் தானம் கொடுக்காலம். கோமேதகக் கல்லை ஆபரணங்களில் சேர்த்து அணிவதும் நலன் தரும்.
|