Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


007சனி
SANI: Watchman, cleaners, peon, sweeper, cobbler, miner, brick layers. சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள் 1 சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும் உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள், மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள். ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும் 2 சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும் ++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பொதுவாக நன்மையான காலம். 3 சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள் உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம் விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும். சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும் 4 சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும் ++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும். வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். 5 சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும் நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும் பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி, மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும். மன உளைச்சல் இருக்கும். 6 சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும் சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும். உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை இழக்க நேரிடும். 7 சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும் 8 சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில் இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால் மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும் எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும் சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும் ++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார் சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள். எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில் அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம். கோள்சாரச் சனி (Transit Saturn) பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன் நன்மை செய்யக்கூடியவர் அல்ல! நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில் நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது. அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும் உபத்திரவம் இருக்காது. பிடுங்கல் இருக்காது! சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம் கொடுக்க வேண்டிய நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும். நொந்து போகும் அளவிற்குத் தாமதப்படும். கோள்சாரத்தில் 3ஆம் இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல் இருக்கும் அதிக உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள். சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே நல்லது. செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில் சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல. தொல்லையானது. அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும் நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல! சனியும் புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு) நன்மையளிக்கும் Mercury is an auspicious planet but it is basically a neutral planet. It adopts the nature of the planets placed in the same house and acts like them. The combination in between Saturn and Mercury is of benefic nature. The house in which this combination takes place receives positive results. சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே தீரும். யாரும் தப்பிக்க முடியாது. இறைவழிபாடு பயனளிக்கும். வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள் மேஷத்தில் சனி: இங்கே சனி நீசம். ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். ரிஷபத்தில் சனி இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால் உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர். The keeping of one's thoughts and emotions to oneself: கறுப்பான தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு எதிரானவர். எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள் தந்திரமிக்கவர்கள் சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு இருப்பார்கள் மிதுனத்தில் சனி இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால் ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான். ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள். சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள் இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள் கடகத்தில் சனி இது சந்திரனின் வீடு சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள். மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள். சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். சிம்மத்தில் சனி பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் (firmly or stubbornly adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument, persuasion, or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட ஒவ்வாத சிந்தனையுடையவர்கள் சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள் கன்னியில் சனி கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள் இருக்கக்கூடியவர்கள் துலா ராசியில் சனி ++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன் அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான். செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான் (இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின் வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?) அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன் சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள் - விருச்சிகத்தில் சனி இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல! ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன். சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம். சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள் சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும் தனுசு ராசியில் சனி! ++++++இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில் புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும். வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும். அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் மகரத்தில் சனி ++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும் திகழ்வான் சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள் கும்பத்தில் சனி ++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும். மீனத்தில் சனி ++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான். நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான், இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆகவே பொறுமையாக அலசுங்கள்   பிறந்த ஜாதகம், அவர்களுடைய இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை, அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியிலுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள் இருக்கும். உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதியான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட் போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள் அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன் இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது. இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன் மட்டுமே. ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற் சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும். யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப வேண்டாம்! 1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும் 2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார் ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது சாடே சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன் அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும். அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள், வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும் வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத்தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதியின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும். ’சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார். சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய மூன்று ராசிகளைத் தவிர மற்ற இடங்களில் அவர் நன்மைகளைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்குமேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது. ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்கொண்டால், அவர் வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும். அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்பார்கள். முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும். அது அறிவு,கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்கவைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame and detachment Period என்றும் சொல்லலாம்) அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக் கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக் காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள். மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில் நிர்ணயிக்கப் பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும் காலமென்றால், அவனுடைய கதையை முடித்துக் கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும். சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப் பிடித்துக் கொண்டு உயிரோடு இருப்பார்கள். அவர்கள் தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள், அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of Second Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள் இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில், 7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக் கொடுப்பார் வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நிலபுலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட வைத்து விடுவார் சனி, ஒரு ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்கான பலாபலன்கள் 1ல் அதாவது லக்கினத்தில் சனி லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர் குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர் நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர் சமூகத்தோடு ஒத்துப்போகாதவர் கடின மனதை உடையவர். தந்திரமானவர் கஞ்சத்தனம் மிக்கவர் சுத்தமில்லாதவர் குறுகுறுப்பானவர் உடற்குறைபாடுடையவர் கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 2ல் Saturn in the Second House Saturn makes one not above want and prone to lying. Will live in foreign lands. Will be a lover of justice. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம் பிரபலமில்லாமை தடைப்பட்ட கல்வி கண்பார்வைக் குறைபாடு சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர் அதிரடியாகப் பேசுபவர் சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும் போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 3ல் ++++Saturn in the Third House Saturn in the 3rd makes one very intelligent & liberal minded. Will have strength of character and will be adventurous. Will have subordinates and all the comforts of life. துணிச்சல் மிக்கவர் தைரியம் மிக்கவர் விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்) புத்திசாலித்தனம் மிக்கவர் செல்வந்தர் சாதனைகள் படைப்பவர் சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும் அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 4ல் Saturn in the Fourth House Affliction to the heart. Will lack happiness and mental peace. Will be crooked and will be a violator of social norms. Will live in foreign lands. மகிழ்ச்சி இல்லாதவர் திடீர் இழப்புக்களை உடையவர் குறுகிய மனப்பான்மை உடையவர் நல்ல சிந்தனையாளர் அரசியல் ஆதாயம் இல்லாதவர் சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும் இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள் தாய்க்குக் கண்டம் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 5ல் Saturn in the Fifth House Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth. Will lack intelligence and will be fickle minded. Will have high longevity. குறுகிய மனதை உடையவர் சகஜமாகப் பழகாதவர் சிலருக்குக் குழந்தைகள் இருக்காது விநோதமான கண்ணோட்டங்களை உடையவர் எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர் அரசுக்கு எதிராக நடப்பவர் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) - 6ல் Saturn in the Sixth House Saturn in the sixth is the destroyer of enemies. Will love all the pleasures of the mundane. Will be a voracious eater. Wealth will grace the native in no uncertain measure. பிடிவாதமான ஆசாமி ஆரோக்கியம் இல்லாதவர் சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும் வாக்குவாதம் செய்பவர்கள் சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும் புத்திசாலி சுறுசுறுப்பானவர் சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 7ல் ++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும் உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார். அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா? அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின். ஜாலியான ஆசாமி. சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும் சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும் (இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்) நளினமானவர் மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?) ஆர்வமுள்ளவர் அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார். சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும் 8ல் இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள் உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும். சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள் ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை குடிப்பழக்கம் இருக்கும். பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும் கண் பார்வைக் கோளாறு இருக்கும். தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும் ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும் சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால் ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான், விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான். கொடூரமான சிந்தனைகள் உடையவன் நீண்ட ஆயுளை உடையவன் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) 9ல் ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும் அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும். சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள் வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன் கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும். சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது. சாமியாவது, பூதமாவது போடா என்பான். 10ல் ++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம் கிடைக்கும். Saturn makes one have scholarship புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள். சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எல்லா வசதிகளும் தேடிவரும். ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள் நல்ல உழைப்பாளி சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும் 11ல் +++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம். This is the best postion for Saturn. Saturn well posited in the eleventh makes one highly determined, healthy, wealthy and wise. Will have royal favour. Will be a good sculptor. Will have a lot of subordinates. சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும் சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள் சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள் சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும் வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்! 12ல் இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம் சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப் பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம் ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி! எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி! ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான். "போனால் போகட்டும் போடா" என்று பாடுவான் ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும் மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும் Saturn makes one devoid of happiness & wealth. Will be tormented by many an illness ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான் தனிமைப்பட்டு விடுவான். (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர் பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன் சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும் ஏற்படும். ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில் ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. Saturn destroys the house it occupies. The seventh place position is exempted since Saturn receives directional strength. ஜாதகத்தில் வலுவாக இருக்கும் சனி, அனுசரித்துச் செயலாற்றும் தன்மை, புகழ், பொறுமை, தலைமை ஏற்கும் சக்தி, அதிகாரம், நீண்ட ஆயுள், நிர்வாகத்திறமை, உண்மையாக இருத்தல், விசுவாசம், நேர்மை, நியாயமாக இருத்தல், தவறு எது சரி எது என்று உணர்ந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைச் ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகத்தில் வலுவில்லாமல் தீமை பயக்கும் நிலையில் இருக்கும் சனி துன்பம், துயரம், தாமதம், தடைகள், ஏமாற்றங்கள், வம்பு, வழக்குகள்,வெறுப்பு, கஷ்டங்கள் என்று வரிசையாக தொல்லைப் படுத்தும், அவதிப்படும் சூழலையே ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகன் நம்பிக்கையின்மையோடும், உணர்ச்சி வசப்படும் நிலைமையோடும், ரகசியமாகவும் செயல்படும் நிலைமைக்கும் தள்ளப்படுவான். இந்த categoryயில் (miseries, sorrows, delay, obstruction, disappointment, disputes, dejection, difficulties)ஏதாவது விடுபட்டிருக்கிறதா? விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சனிக்கு உரிய கிழமை சனிக்கிழமை. உலகில் அது எந்த நாடாக இருந்தாலும் சனிக்கிழமைதான். (Saturday is for Saturn) வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் அகிய மூன்றும் உலகிற்கு இந்தியர்கள் அளித்த கொடை. இந்தியாவில் இருந்து வணிகத்திற்காக அக்காலத்தில் வந்து சென்ற கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாக, அது உலகெங்கும் பரவியது சனியின் ஆதிக்க திசை மேற்கு சனிக்கு உரிய நிறம்: கறுப்பு சனிக்கு உரிய நவரத்தினக் கல்: நீலக் கல் (blue sapphire) சனிக்கு உரிய எண்: 8 சனிக்குச் சொந்த வீடுகள்: மகரம், கும்பம் சனிக்கு நட்பு வீடுகள்: ரிஷபம், மிதுனம், கன்னி சனிக்குச் சம வீடுகள்: தனுசு, மீனம் சனிக்குப் பகை வீடுகள்; கடகம், சிம்மம், விருச்சிகம் சனிக்கு உச்ச வீடு: துலாம் சனிக்கு நீச வீடு: மேஷம் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சனிக்கு 100% வலிமை இருக்கும். சனியுடன் சூரியன் சேரக்கூடாது. அதுவும் ஜாதகனின் லக்கினத்தில் சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள், உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும் போல ஒற்றுமையாக இருப்பார்கள்:-)))) சம வீட்டில் இருக்கும் சனிக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சனிக்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் சனிக்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த சனிக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சனிக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் Avery Company தராசை வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!   சிம்மத்தின் அதிபதி சூரியன். சனிக்கும் சூரியனுக்கும் எப்போதும் ஆகாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனுக்கு பிறந்தவர்தான் சனி. சூரியனின் மனைவி பெயர் சம்ஞா. சூரியனுக்கும் சம்ஞாவுக்கும் பிறந்தவர் யமன். என்னதான் அன்பு மனைவியாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்தை சம்ஞாவால் தாங்க முடியவில்லை. அதனால் தன்னுடைய நிழலை ஒரு பெண்ணாக (அதன் பெயர் சாயா) படைத்து சூரியனிடம் தள்ளிவிட்டு தந்தை வீட்டிற்கு போய்விட்டாள். இந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. ஒரு கட்டத்தில் பங்காளிச் சண்டை முற்றி சனியை யமன் எட்டி உதைக்க சனிக்கு கால் ஒடிந்து விட்டது. அதனால் சனி நொண்டி நொண்டி மெதுவாகத்தான் நடப்பார். ஆகவே அவருக்கு சனைச்சரன் ( மெதுவாக நடப்பவன்) என்று பெயர்... ராசி மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வர சனிதான் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதாவது 30 ஆண்டுகள். இப்படி பலவிதங்களில் பாதிக்கப்பட்டதால் சூரியன் மீது சனியனுக்கு அடங்காத கோபம். அதனால்தான் சிம்ம ராசிக்காரர்களை எழரைச் சனி காலத்தில் சனிபகவான் படாத பாடு படுத்தி விடுகிறார். ஏழரைச் சனி காலத்தில் சனியனோடு மல்லுக்கட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தால் அவர் சற்று கரிசனமாகவே கஷ்டத்தைக் கொடுப்பார். இந்தச் சுற்றில் சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மகம் ஒன்றாம் பாதத்திற்கு அதிபதி செவ்வாய் .போர்க்குணம் கொண்டவர். இவர் யாருக்கும் மடங்கிப் போக விடமாட்டார். இதுதான் இருக்கும் பலவீனம். இதைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அருகில் இருக்கும் ஆஸ்தான ஜோதிடர்களின் வேலை. அதே நேரத்தில் ஏழரைச் சனி எல்லாருக்கும் கெடுதலை செய்வார் என்று கூறமுடியாது. நட்பு வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவற்றில் இருந்தால் சனியின் தொல்லை மிகக் குறைவாகவே இருக்கும். 6. சனி செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 5:25:48 PM


சங்கர காலசர்ப்ப யோகம் ராகு 12வது வீட்டில் இருக்கிறது. கேது 6வது வீடு வீட்டில் இருக்கிறது.



Psssrf ஜோதிட சாப்ட்வேரில். ஜோதிடர் முகவரி பதிவு செய்து. பிரிண்ட் செய்யும் முறை.



வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf