சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs) |
பிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள ராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள். யார் பிரித்துள்ளார்கள்? ஜோதிடத்தை வடிவமைத்த மேதைகள்! அதற்கு ஆதாரம் உண்டா? பழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான் சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs) என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual
1 சர ராசிகள் (Movable signs) மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
2 ஸ்திர ராசிகள் (Fixed signs) ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
3 உபய ராசிகள் (Dual signs) மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
1 சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு சில விஷேசத் தன்மைகள் உண்டு. சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள் செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள். துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும். ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
2 ஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள். விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். தனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகளும் ஒத்து வரும். ஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம் இவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை அடைவார்கள்.
3 உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs) இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஊசலாடும் தன்மையை உடையவர்கள். வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள். புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள். எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள். எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள். போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள். எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள். They tend to wander aimlessly and seldom work towards a fixed objective. Thus the sign ascending in the eastern horizon at the time of the birth of an individual tells the qualities with which he is born. He can be trained suitably and given suitable job when he grows up according to his natural inclination |