| நாலு பேருக்கு நன்றி!
நான்காம் எண் ராகுவிற்கு உரியது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள். நடைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். ஆங்கிலத்தில் சொன்னால் They are very practical people.
பந்தா இல்லாதவர்கள்.
நான்காம் எண்காரர்கள் எதிலும் விவரமானவர்கள். அமைப்பானவர்கள்.
ஒரு ஒழுங்குமுறையில் செயல்படக் கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள்.
எடுத்த காரியத்தை நடுவில் விட்டு விடமாட்டார்கள். என்ன இடர் வந்தாலும் போராடி அல்லது எதிர்த்து நின்று கடைசியில் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். கடினமான உழைப்பாளிகள்
வங்கியாளர், கணக்காளர், மேலாளர், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள் போன்ற வேலைகளில் சிறப்பாகச் செயல் படக்கூடியவர்கள்.
இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். அதனால் சமயங்களில் வளைந்து கொடுத்துப் போகமுடியாமல் அவதிப்படவும் நேரிடும்
பாரம்பரிய வழிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செயல் படக்கூடியவர்கள். மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
நம்பிக்கைக்கு உரியவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். இயல்பானவர்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு முரண்பட்டவர்களாகவும், குறுகிய சிந்தனைகளை உடையவர்களாகவும், பிடிவாதம் மிக்கவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அது எண்காரர்களுக்கு உரிய பொதுத் தோற்றம்.
காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள். சீக்கிரமே வெறுப்பும் அடையக்கூடியவர்கள். காதலில் ஈடுபடும்போது, காதலன் அல்லது காதலி இசைந்து வருபவராக இருந்தால், நேர்த்தியான காதலராகப் பரிணமளிக்கக்கூடியவர்கள்.
புரிந்து கொள்ளமுடியாதவர்கள். அதன்காரணமாகப் பலர் இவர்களை நெருங்கமாட்டார்கள். தங்களை நேசிப்பவர்களுக்கு உயிரையும் தரக்கூடியவர்கள். அதே நேரத்தில் தனிமை விரும்பிகள்.
(Difficult to understand and get close to. Loyal to those they love but a loner)
எதையும் சட்டென்று அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும்.
தெளிவான மனநிலையை உடையவர்கள். துணிச்சலானவர்கள்.
சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்கள்
அதீத புத்திசாலிகள். அதீத மனக்கட்டுப்பாடுகள் மிக்கவர்கள். பகுத்தறிவு கொண்டவர்கள். எதிர்பார்ப்பதைச் செய்யக்கூடியவர்கள். கனவுகளைத் துரத்திச் சென்று அதை நனவாக்குபவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள். சமூக சிந்தனைகளை உடையவர்கள். இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். சிலரால் காதலில் வெற்றிபெற முடியாது. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இருந்தாலும் திருப்தியடையாதவர்கள். அதீதமான விருப்பு வெறுப்புக்களை உடையவர்கள். சிலர் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். அதன்காரணமாகத் தனித்து இருக்கவும் நேரிடும். பல அரிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர்கள். இருந்தாலும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டாரகள்.
Health Finance:
Birth number 4 people usually suffer form breathlessness, weakness, sudden stomach pain respiratory problems. Their financial prosperity usually start from late twenties.
If possible they should avoid joint business. They will be more successful while working alone.
சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் தனித் தன்மைவாய்ந்தவர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.
”நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி”
என்று புரட்சித்தலைவரின் படத்தில் பாடல் ஒன்றுவரும். அந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் என்று வர்ணிக்கப்படும் நபர்கள் இந்த 4 எண்ணுக்கு உரியவர்கள். தங்களுடைய முற்போக்கு சிந்தனைகளால் பலருக்கும் தோள் கொடுப்பவர்கள் அவர்கள்.
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள்
1,2,7 8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்கள்
இவர்களுக்கு உகந்த கிழமைகள்
Lucky colour are Electric blue, Half Shades, Grey
கோமேதகம் இவர்களுக்கு உரிய நவரத்தினம் ஆகும். ராகு திசை நடப்பவர்கள் அனைவரும் இந்தக் கல்லை அணிந்து கொள்ளலாம். |