பஞ்ச கவுட பிராமணர்களின் மற்றொரு பிரிவாக விளங்கும் இந்த வடஇந்திய பிராமணர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் வாழ்கிறார்கள். அதர்வண வேதத்தைத் தொகுத்ததாகக் கருதப்படும் தாதிச்சி ரிஷியின் வழி தோன்றல்களாகக் கருதப்படும் இவர்கள் அனைவரும் அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள். சிவ வழிபாட்டை முதன்மைப்படுத்தும் சைவர்கள். தாதிச்சி பிராமணர்களின் சில முக்கிய கோத்திரங்கள். 1. கௌதம 2. வத்ஸ (ஸ்ரீ வத்ஸ) 3. பரத்வாஜ 4. பார்கவ 5. கோச்சஸ் 6. காசியப 7. சாண்டில்ய 8. ஆத்ர 9. பரஸார 10. கபில 11. கர்க ஆகியவை.
இப்பிரிவு பிராமணர்களின் கர்த்தாவாக விளங்கும் தாதிச்சி ரிஷியைப் பற்றி குறிப்பிடப்படும் ஒரு கதை மிகவும் சுவாரஸியமானது. அதர்வண மன்னனின் குமாரரான தாதிச்சி மன்னன் வேதங்களில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டு ஒரு ராஜரிஷியாக விளங்கினார். விரித்திரா என்ற அசுரன் தான் பெற்ற தவ வலிமையால் பல அறிய சக்திகளைப் பெற்று மற்றவர்களைத் துன்புறுத்தி வந்தான்.
விரித்திரா அசுரனின் வன்முறையில் விண்ணுலக தேவர்களும் நிலைகுலைந்து நடுங்கினார்கள். அவனுடன் நேரிடையாகப் போரிட்டு அவனை அழிக்க முடியாத தேவர்கள் அனைவரும் இந்திரன் தலைமையில் மகா விஷ்ணுவிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.
அசுரனாய் இருந்தாலும் அந்தணனாய்ப் பிறந்து பல அரிய சக்திகளைப் பெற்ற விரித்திரனை எளிதில் கொல்லப்படுவது இயலாத காரியம். மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட வஜ்ராயுதம் மூலமே அவனை வீழ்த்த முடியும். இவ்வாறு சொன்ன இறைவன் விஷ்ணு அவ்விதம் தன் எலும்பையே கொடுத்து உதவத் தயாராக உள்ள தாதிச்சி ரிஷியையும் தேவர்களுக்கு அடையாளம் காட்டினார்.
தயங்கி நின்று தங்கள் கோரிக்கையை முன்வைத்த தேவர்களை நோக்கி நன்மை ஏற்படுவதற்கு என் எலும்புகளைத் தந்து உதவுகிறேன். வீணாகப் பூமியில் வீழ்ந்து அழிவதைவிடத் தீய சக்தி ஒழிவதற்கு என் எலும்புகள் பயன்படட்டும் என்று தாமாகவே அவற்றைக் கொடுத்து உதவினார். தாதிச்சி ரிஷியின் எலும்புகளின் மூலம் தயாரான வஜ்ராயுதம் கொண்டு அசுரன் விரித்திரனுடன் 360 நாள்கள் போர் நடந்தது. தன்னுயிர் தந்து அழியாப் புகழ்பெற்ற தாதிச்சி ரிஷியின் புதல்வன் பிபாலதா ஆவார். பிரசன்ன உபநிஷித் என்று அறியப்படும் பிரசன்னம் தொடர்பான எல்லா விடைகளையும் உள்ளடக்கிய உபநிஷத பிரிவு இம்மன்னனின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆதிகாலத்தில் ரிக், யஜூர், சாமவேதங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன என்றும் ஆயகலைகள் 64ம் உள்ளடக்கிய அதர்வண வேதம் தாதிச்சி ரிஷியின் காலத்திற்குப் பின்பே நடைமுறைப்படுத்தப்பட்டன என்று கருதப்படுகிறது. கேரளாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள பிரசன்ன ஜோதிட முறையின் மூல ஸ்லோகங்கள் தாதிச்சி மற்றும் அவரது குமாரர் பிபலாதா ஆகியோரால்தான் இயற்றப்பட்டன.
தேவ ப்ரசனம் எனப்படும் இம்முறையில் மனிதனால் எளிதில் விடை காண முடியாத இயற்கைச் சீற்றங்களின் காரணம், கடும் பஞ்சம் மற்றும் இறை சக்தி போன்றவை ஆராயப்படுகின்றன. அதர்வண வேத அத்யயனம் செய்த நம்பூதிரி பிராமணர்களால் ஒரு குறிப்பிட்ட பூஜை நியதியில் உருட்டி விடப்படும் முத்துக்கள் அல்லது சோழிகளின் அடிப்படையில் தீர்வுகள் அடையப்படுகின்றன. தற்காலத்தில் பொருள்கள் திருட்டுபோவது முதல் சிறு சிறு அற்பக் காரியங்களுக்கும் ப்ரசனம் மேற்கொள்ளப்படுவது முற்றிலும் தவறாகும்.
தாதிச்சி ரிஷி ஹிங்கிலாஜ் தேவியின் மேல் இயற்றியுள்ள மந்திரம் அந்தத் தேவியின் அருள் பெறும் உபாசனை மந்திரமாக இன்றும் தியானிக்கப்படுகிறது. அந்த மந்திரம் பின்வருமாறு:
"ஓம் ஹிங்குலு பரம் ஹிங்குலு அமுர்த்பிணி தாணூ சக்தி மனக சிவஸ்ரீ ஹிங்குலாய் நமஹ. ஸ்வாகா"
பொருள்: ஓ ஹிங்குலா தேவி அவள் அமிர்தத்தையும் அவதார சக்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளாள். சிவ பெருமானுடன் இருக்கும் அவளை வணங்கி இந்தக் காணிக்கையை அளிக்கிறோம்.
ரிஷி தாதிச்சியின் சகோதரி தாதிமதி அன்னைக்கு ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் கோத் மங்லோடு என்ற கிராமத்தில் ஒரு ஆலயம் இன்றும் உள்ளது. ஹிங்கிலாஜ் தேவி ஆலயம் இருக்கும் இடம் தற்போது பாகிஸ்தான் நாட்டில் பலுஜிஸ்தான் பிரதேசத்தில் உள்ளது. ஆனால், ஒரு ஆசிரமம் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரத்திற்கு அருகே உள்ள நமிஷ்ஆராண்ய என்ற இடத்தில் உள்ளது.
******************************************************************************************************
குழந்தைச்செல்வம் உண்டா என்பதை அறிய சந்தான பிரசன்னம்
காணாமல் போனவர்களைப் பற்றி அறிய புரோஷித பிரசன்னம் பார்க்கலாம்.
நவக்கிரக பூஜை செய்த தாம்பூல ஆருடம் அஷ்டமங்கல சங்கியை திரிஸ்புடம் சதுஸ்புடம் சொர்ண ஆருடம் இவற்றால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு ஜோதிடம் பார்ப்பதே அஷ்டமங்கல பிரசன்னம் ஆகும்.
**************************************************************
*ப்ரச்நம்*
இது ஜ்யோதிஷத்தின் ‘ஹோரா’ என்னும் பிரிவைச் சேர்ந்தது; கேரளத்தில்
வழக்கத்தில் இருப்பது.
* தாம்பூல ப்ரச்நம் – தொலந்துபோன நபர்கள், பொருட்கள், வளர்ப்புப்
பிராணிகளை மீட்பதற்கானது. கேட்பவன் கொண்டு செல்லும் வெற்றிலை எண்ணிக்கை,
நேரம், தரம் இவற்றின் அடிப்படையில் அமைவது
* தேவ ப்ரச்நம் – ஆலய வழிபாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்து
அவற்றுக்கான பரிஹாரத்தைக் கூறுவது; ஆலயப் புனரமைப்புத் தொடங்குமுன் தேவ
ப்ரச்நம் கேட்டறிந்த பின் பணிகளை ஆரம்பிப்பர். ஆலய வளாகத்துக்குள்
இஷ்டப்படிப் புதிய ஸந்நிதிகளைக் காணிக்கை வசூலுக்காக நிர்மாணிக்க
முடியாது, தேவ ப்ரச்நம் இடம் கொடுத்தாலன்றி.
* அஷ்ட மாங்கல்ய ப்ரச்நம் – குடும்ப நலனுக்காகக் கேட்டறிவது
* ஸ்வர்ண ப்ரச்நம் - ஒரே ஒரு முக்கியமான பலனை அறிந்து கொள்வதற்காக;
ஒருவன் இதில் பயனடைந்தால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இதைக் கேட்கக்
கூடாது என்னும் நியதியும் உண்டு.
ப்ரச்நம் – கேள்வி, ஆனால் வழக்கத்தில் Problem ,பிரச்சினை
ப்ருச்சகன் – கேட்பவன்
ஆசார்யன் – பலன் சொல்பவன்; இவன் ஸ்வஸ்த அந்தராத்மநாக –
தன்னில் நிலைபெறும் தன்மை கொண்டவனாக, விருப்பு
வெறுப்பற்றவனாக
இருக்க வேண்டும்.
மூடநம்பிக்கை என்று முற்றாக ஒதுக்க முடியாது;
முறையாகக் கற்றறிந்து பலன் சொல்வோர் இன்னும் இருப்பதால் பலரும்
இவற்றுக்கு ஆதரவு தந்து பயன் பெற்று வருகின்றனர்; போலிகளும் மிகுதி
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை குறித்த U tube ஒன்றையும் ஒரு முறை பார்த்துள்ளேன்
*************************************** |