|
வைஷ்ணவர்களும் சிவராத்திரி விரதத்தை இருக்க வேண்டும் எனக்கருட புராணம் கூறுகிறது. பகல் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்தில் நெய் தீபம் ஏற்றி நான்கு காலத்திலும் சிவ பூஜை செய்து ஐந்தெழுத்தை உச்சரித்து மறுநாள் பிராயணம் செய்ய வேண்டும்.
விரதம் கடைபிடிப்போர் முதல் ஒரு நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாமம் வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
|