|
இந்த விரத பூஜையை பிருந்தாவன விரத பூஜை என்றும் கூறுவார்கள். இந்த துளசி விரத பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும். இந்த் துளசி விரத பூஜை துளசி மாடத்தில் வைத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு வருஷமும், கார்த்திகை மாதம் சுக்ல பஷதுவாதசி திதி அன்று செய்ய வேண்டிய விரத பூஜை இது.
இந்த விரத பூஜையை மேற்கொள்பவர்கள் காலையில் இருந்து மறுநாள் காலை வரை துளசி தீர்த்தம் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.
துளசி மாடத்தை சுத்தம் செய்து, மலர் சரங்களால் அலங்கரித்து, சந்தன குங்கும திலகமிட்டு, தேங்காய் பழம், தாம்பூலம் ஆகியவற்றுடன் பெண்கள் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள்- புதிய தாலிசரடு ஆகியவற்றை வைத்து தூபதீப நிவேதங்கள் செய்து, துளசி மாடத்தை ஒன்பது முறை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும்.
இந்த விரதத்தால் கணவன் மனைவி பிரிந்திருந்தால் திரும்ப சேருவார்கள். மாங்கல்ய பலன் கிடைகடகும். மாங்கலயதோஷங்கள் விலகும். மனமகிழ்ச்சியும் மனத்திற்கு ஏற்ற மணவாழ்க்கையும் கிடைக்கும் என்று கூறுகிறது. துளசிவிதானம் என்கிற வடமொழி நூல்.
கன்னிப் பெண்களும் சுமங்கலிப் பெண்களும் கடைபிடித்து பலன் பெறக்கூடிய சக்தி வாய்ந்த விரதம் துளசி விரதம்.
|