ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!
ஆறாம் எண்ணிற்கு உரிய கிரகம் சுக்கிரன்.
காதல், ரசனை, கலைகள்,அழகு, ஆடம்பரம் என்றுள்ளவைகளுக்குக் காரகன் சுக்கிரன். ஆகவே ஆறாம் எண்ணிற்கு உரியவர்களுக்கு அதெல்லாம் இருக்கும். இப்படிச் சொல்லலாம் - அதற்கெல்லாம் உரியவர்கள் இவர்கள்.
ரிஷபம் மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்கள், அத்துடன் 6ற்குரிய தேதிகளில் பிறந்திருந்தவர்கள், அல்லது ஆறாம் எண் விதி எண்ணாக அமையப்பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிறையவே இருக்கும்.
காதல் உணர்வும், கலை உணர்வும் இந்த எண்காரர்களை ஆட்கொண்டுவிடும். பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அனைவருடனும் இசைந்து போவார்கள். பிரச்சினை செய்யாத பிறவிகள் என்று சொல்லலாம்.
இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல, காதலும், இசையும் இவர்களை இழுக்கும். இவர்கள் வசிக்கும், வீடு, அலுவலகம் என்று எதுவாவானாலும் கலைநயத்துடன் அல்லது அலங்காரத்துடன் இருக்கும். விதம்விதமான உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். சாதுவான, இனிமையான தன்மையுடன் இருப்பார்கள். சிலசமயங்களில் மட்டுமே மற்ற சகமனிதர்களைப்போல நடந்துகொள்வார்கள். அதுவும், இவர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான செயல்கள் நடக்கும்போது மட்டுமே அப்படி நடந்துகொள்வார்கள்
நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதுபோல, காதலின்றி அமையாது இவ்வுலகு எனும் நம்பிக்கை உடையவர்கள் இவர்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
சங்கீதம், நாட்டியம், நாடகம், திரைப்படம், என்று மனதை மகிழ்விக்கும், பொழுது போக்கும் அம்சங்கள் அனைத்திலும் ஈடுபாடு கொள்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவைகளில் தங்களுக்குள்ள திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள்.
பணமும்,நவீன வாழ்க்கை வசதிகளும் இவர்களைத் தேடிவரும். அதனால் பனத்தைக் கட்டிக்காக்க மாட்டார்கள். செலவுகளுக்கு அஞ்ச மாட்டார்கள்.
எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!
இந்த எண்காரர்கள் பாசமிக்கவர்கள். பொறுப்பானவர்கள். தியாக உணர்வு உடையவர்கள், சுயநலமில்லாதவர்கள், கொடையாளிகள், அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், நடுநிலமையுடையவர்கள், கவர்ச்சியானவர்கள். இது அனைத்தும் பொதுக்குணங்கள்.
இதைப்படித்துவிட்டு, சார் என் மகனின் எண் ஆறு. ஆனால் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என்று யாரும் கேட்க வேண்டாம். அதனால்தான் இவைகளைப் பொதுக்குணங்கள் என்று சொல்கிறேன். ஜாதகத்தில் உள்ள கோளாறுகளுக்குத் தகுந்தபடி இந்தக் குணங்களில் சில இல்லாமலும் போகலாம். அதுதான் வாங்கி வந்த வரம் எனப்படும்.
இந்த எண்காரர்கள் சிறந்த குடும்பஸ்தர்களாக விளங்குவார்கள். சமூக அக்கறை இருக்கும். வாக்கை நிறைவேற்றும் தன்மை இருக்கும். ஒப்புக்கொண்டபடி நடக்கும் செயல்பாடு இருக்கும்.
பாடகர், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், கைவினைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஓவியர், சிற்பி என்றுள்ள துறைகளில் பணியாற்றத் தகுந்தவர்கள் இவர்கள். அவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.
They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.
உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.
நட்பு எண்கள் 4, 5, 8
எதிரான எண்கள்: 1, 2
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை.
நவரத்தினம்: வைரம்
உலோகம்: வெள்ளி
உகந்த தொழில்கள்: Healt care, alchemists, art critics, journalists
வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9
சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவிக்கப் பிறந்தவர்கள். கவியரசரின் மொழியில் சொன்னால், இந்த உலகம் பிறந்தது எனக்காக என்பார்கள். ஓடும் நதிகள் எனக்காக என்பார்கள். மலரும் அத்தனை மலர்களும் எனக்காக என்பார்கள்.
பாடலின் முக்கிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்:
"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்"
|