1. கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருக்கும் ஜாதகர்களுக்கு திசைகளும், புத்திகளும் நல்ல திசைகளில் அதிக நல்ல பலன்களையும், மோசமான திசைகளில் குறைவான தீய பலன்களையும் மட்டுமே கொடுக்கும்
2. அதே கிரகங்கள் ஜாதகத்தில் பகை வீடுகளிலும் அல்லது நீசம் பெற்றும் இருக்குமானால் நல்ல திசைகளில் குறைவான நல்ல பலன்களையும், மோசமான திசைகளில் அதிகமான் தீய பலன்களையும் கொடுக்கும்
3. கேந்திரம், திரிகோணங்களில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திகளில் நன்மையான பலன்களையும், ஆறாம் இடம், எட்டாம் இடம், பன்னிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திகளில் அதிகமான தீமைகளைத்தான் கொடுக்கும் |