Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


ராஜயோகம் அளிக்கும் ராகு

அவன் பெரிய வைரக்கியகாரன் அவன் நினைத்ததை செய்து முடிப்பான் என்று சொல்ல கேட்டு இருக்கிறௌம். அவர்கள் எல்லாம் ராகுவின் வலிமையான ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். உலகம் முழுவதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பலவித மொழியினாலும் பாராட்டப்படவும் அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து இவற்றை அடையவும் பொருள் வளத்தில் செழிப்படையும் அனைத்துலகிலும் ராஜயோகத்தை அளிப்பவர் ராகு.

ராகு யார்?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் பாற்கடலில் அமிர்தத்தைக் கடைய வேண்டும் அப்படிக் கடைய மந்திரம் மலையை மத்தாக உபயோகிக்க வேண்டும். தேவ பலத்தினால் மட்டும் அமிர்தத்தை எடுக்க முடியாது. அசுரபலம் தேவை என்று திருமால் மகாவிஷ்ணு தேவேந்திரனுக்கு யோசனை கூறினார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்தான். சந்திரன் தூணாக இருந்தான். வாசுகி எனும் பாம்பு நானாக (கயிராக) உதவியது. மலையைக் கடைய ஆரம்பித்தார்கள். அமிர்தத்தைக் கடைய முற்பட்டபொழுது ஏற்பட்ட வலி தாங்காமல் வாசுகி விஷத்தைக் கக்க அனைவரும் பயந்து பரமசிவனிடம் முறையிட்டு சரணடைந்தார்.கள். பரமசிவனார். ஆலகால விஷத்தைத் தானே உண்டு நீலகண்டனாக மாறினார்.. மீண்டும் பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தார்கள். அதில் திருமகள் ஐராவதம் காமதேனு என்று பல அரிய பொருள்கள் பாற்கடலிலிருந்து வெளியே வந்தன. கடைசியில் அமுதம் பெருக்கெடுத்தது. அமிர்தம் கிடைத்ததும்; ஒரு பிரச்சனை ஏற்பட்டது தீயவர்களான அசுரர்கள் அமுத்ததை உண்டால் அவர்கள் சிரஞ்சீவியாகி விடுவார்கள் உலகத்தில் அவர்களால் ஏற்படும் துன்பத்திற்கு விடிவே கிடையாது என்று மோகினிப் பெண் உருவவெடுத்து மகாவிஷ்ணு அமிர்தத்தை தானே பங்கிடுவதாகவும் தேவர்கள் ஒரு புறமும். அசுரர்கள் இனனொரு புறமும் என்று இருபுறமாக அமரும்படி கேட்டுக்கொண்டாள். தேவர்கள் அனைவரும் திருமாலே மோகினி என்று கண்டு கொண்டார்கள் ஆனால் அசுரர்கள் மோகினியின் அவய அழகுகளில் பார்வையைப் பதித்து சண்பக மலரும் செம்பொன்னும் இணைந்த தேகம் முகிலையொத்த குழல் மூன்றாம் பிறையை ஒத்த நெற்றி மானின் கண்கள் எள் போன்ற நாசி மலையை நிகர்த்த முலைகள் ஈட்டி போன்ற முலையின் காம்பு பிடியில் அடங்கும் இடை ஆமையையொத்த புறவடிவு வாழையயொத்த தொடைகள் பந்து போன்ற குதிகால் தாமரை மலர்போன்ற பாதங்கள் எந்த எந்த அவயவங்களைப் பார்த்தார்களோ அந்தந்த அவயவங்களில் மோகித்து தம்மை மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் காஸ்யபரின் மகள் ஸிம்ஹிகைக்கும் விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பிறந்த மகன் சுவாணபானு அமிர்தம் கடைந்தெடுப்பதில் தேவர்கள் அசுரர்கள் இருவரின் பங்கு இருந்தன. ஆனால் அதனைப் பங்கிடுவதில் தேவர்களுக்கு அதிகமாகவும் அசுரர்களுக்கு வெறும் கரண்டியைக் காட்டியும் ஸ்ரீமகாவிஷ்ணுவான மோகினி பாரபட்சம் பண்ணுவதைக் கண்டான். உடனே சட்டென்று அவனும் தேவர்கள் பக்கம் சென்று தேவவடிவில் அமர்ந்து விட்டான். அமிர்தம் பரிமாறப்பட்டாகி விட்டது. அவன் அதை நக்கி அசிங்கமாகச் சாப்பிடுவதைக் கண்ட சூரிய சந்திரர்கள் பார்த்தனர். மோகினியான மகாவிஷ்ணுவிடம் சாடை காட்டித் தெரிவித்தும் விட்டனர். உண்மையை உணர்ந்து கொண்ட மோகினியாக இருக்கும் ஸ்ரீமகா விஷ்ணு பரிமாறிய கரண்டியாலேயே சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடித்தார் சுவர்ணபானுவின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அமிர்தம் உண்டதால் சுவர்ணபானு இறக்கவில்லை. மாறாக வெட்டபட்ட தலை அப்படியே இருக்க அதிலிருந்து உடல் கருநாகமாக வளர்ந்து ஒரு புதிய உருவாக மாறியது. இதுவே ராகுதேவன் வெட்டப்பட்ட உடலுடன் ஐந்து தலைநாகம் வடிவில் தலை வளர்ந்தது அது கேது எனப்பட்டது. அமிர்தம் பருகியதால் உயிர்பெற்று பரமனை நோக்கித் தவம் செய்து கிரக பதவி பெற்றதினால் ராகு கேது இவ்விருவரும் பன்னிரு ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கி வருகிறார்கள். மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருகையில் ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிரி திசையில் இடமாக எப்பொழுதும் எதிரெதிராக 180 டிகிரியிலேயே சுற்றிவருவர். ஆண் பெண் இனப்பிரிவில் அலியாவான் ராகு குணங்களில் தாமஸகுணத்தோன். தென் மேற்குத் திசைக்குரியயோன். பஞ்ச பூதங்களில் வானம் இவன். ராகு பகவான் நவக்கிரஹ பீடத்தில் சூரியனுக்கு வடமேற்கே அமர்ந்திருப்பதால் உயரமான தோற்றம் உடையவர். ஆட்டுக்கடா வாகனமுடையவார் எட்டுக்குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பவர். நான்கு கைகள் உடையவர் கறுப்பு வண்ணம் இவருக்கு பிடித்தமானது.

ஜாதகங்களில் ராகு
பூமியிலிருந்து சுமார் 9 கோடி மைல் தூரம் உள்ள இந்த ராகு கிரகம். சூரியனுக்கு 13 000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளது. சூரியனை ஒரு முறை அபிரதஷிணமாக சுற்றிவவர பதினெட்டரை வருடங்கள் ஆகும். புராணத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு கிரகம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டாவது கிரகம் இதை சாயா கிரகம் என்று கூறுவார்கள் நிழல் கிரகம் என்றும் கூறுவார்கள். சாயா என்றால் நிழல் என்று பொருள். அவர்கென எந்த ராசியிலும் ஆதிபத்தியமில்லை. எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடாகும். எந்த ராசியில் இருக்கிறாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகிறாரோ எந்த இடத்தில் சோக்கைபெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலனை முழுமையாகத்தருவார் ஒருசில ஜோதிட சாஸ்திர நுல்கள் மட்டும் விருச்சிகம் இவருக்கு உச்சவீடு என்றும் ரிஷபம் நீச வீடு என்றும் கன்னி இவனுக்குச் சொந்த வீடு என்றும் குறிப்பிடுகிறது. ஒரு ராசியில் 1.5 வருடம் சஞ்சாரம் செய்யும் ராகு திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரங்களுக்கு அதிபதி. ஆங்கில எண்ணில் 4ம் எண்ணுக்கு அதிபதியாவார். 4 13 22 தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள். நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவர் சனியை விட செவ்வாயும் செவ்வாயை விட புதனும் புதனை விட குருவும் குருவை விட சுக்கிரனும். சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரை விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகிறார்கள். சந்திர சூரியர்களையே பழமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும்படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ளவர் ராகு யோகத்திற்கு அதிபதி வீரிய பாம்பைப்பற்றி விளங்கச் சொல்லுவாய் யோகந்தன்னை என்ற படி யோக யோகத்தைத் தருபவர் ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்லவர் சோக்கை மற்றும் சுபகிரக பார் வை இருந்தால் ராகு அந்த ஜாதகனைசீமானாகவும் அரசர்க்கு ஒப்பானவராகவும் வாழச் செய்வார் அதனால் தான்
“ராகுவைப் போல் கொடுப்பாரில்லை” என்று சொல்லுப்படுகிறது. அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார அற்றலை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தௌவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும். தந்தை வழி பாட்டனாருடைய சொத்துகள் எல்லாம் அனுபவிப்பதற்கும் கூட ராகுவின் பலம் வேண்டும். மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும் சோர்த்து வைப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான். சூதாட்டம் போன்ற வகைகளில் பணம் சம்பாதிப்பது பொய் சொல்லி ஏமாற்றுதல் அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் செய்து பணம் ஈட்டுவது (கள்ளக்கடத்தல் கள்ள நோட்டு அச்சிடுவது) போன்றவை ஆகும். சுபபலம் பெற்ற சனி ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு.

ராகு சரியில்லாத ஜாதகங்கள்

சந்திர சூரியர்களையே பலமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பொய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும். ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகருக்கு இவர்கள் (ராகு கேது) இன்னல்களைத் தருகிறார்கள்.

மேலும் 2. 7. 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும். மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்யதோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்பதோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும் தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது சாராயம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது தற்கொலைச் செய்து கொள்ளக்கூடிய மனோபாலம் ஏற்படுவது கனவில் நோல் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது. கை கால்களில் சங்கிலி கட்டப்படும் வாய்ப்பு ஏற்படுவது பேய் பிசாசுகளால் தொல்லைகள் செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது. மாந்தீரிக தொழிலில் ஈடுபடுவது. தீயபெண்களிடம் தொடர்பு விதவை பெண்களிடம் தொடர்பு அவர்களால் துன்பம் ஏற்படுவது விபச்சார பெண்களுடன் பழகி அவர்கள் வீட்டிலேயே காலத்தை கழிப்பது செக்ஸ் முறையில் அதிகமான காமபோதைக்கு ஆட்பட்டு பெண்களை கடிப்பது அவர்களின் பிறப்பு உறுப்புகளை எல்லாம் சுவைப்பது பெண் வியாதிகளால் அதிகமான துன்பம் அடைவது பெண்மோகம் கொண்டு பித்தனாக அலைவது. தன்னுடைய தேசத்தை விட்டு ஓடிப்போய் விடக்கூடிய வாய்ப்பு உருது பேசக்கூடிய நாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் பணம் கொடுத்தும் அந்த நாட்டிற்குப்போக முடியாமல் தவிப்பது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் அகாலமரணம் அடைவது தூக்குப் போட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த ஜாதகருக்குக் கட்டாயம் ஏற்படுவது தன் தகுதிக்கு இனத்திற்கு சம்மந்தமில்லாத தொழில் செய்து நஷ்டமடைவது கஷ்டஜீவனம் கடன்தொல்லை உற்ற நண்பர்களால் தொல்லை அறுவை சிகிச்சை சிறை வாசபயம் ஏற்படுவது வருமான வாகளின் மூலம் துன்பங்கள் ஏற்படுவது காவல் துறையினரால் அவமானம் ஏற்படுவது விஷபயம் அங்கஹீனம் வாயுவலிப்பு நோய் பித்தநோய் மறைமுக உறுப்புகளில் நோய்கள் குஷ்டம் போன்ற கொடூர நோய்கள் (எய்ட்ஸ்) கண்டங்கள் ஏற்படல் குடல் சம்மந்தமான நோய் கட்டிகள் குடல்புண் மண்ணீரல் சம்பந்தமான நோய் பரதேச வாசம் ஜலகண்டம் தெருவில் வெட்டி பேச்சு அசிங்கமான பேச்சு நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.
ராகுவின் ஆற்றல் பெற

காளஹஸ்தி நாகைக்காரோணம் திருக்களர் இராமேஸ்வரம் திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் பேரையூர்; திருச்செங்கொடு நாகர்கோவில் நாகநாதர் ஆலயம் திருவேற்காடு சிதம்பரம்தில்லைகாளி போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

ஸ்ரீகாளஹஸ்தி: இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

திருநாகேஸ்வரம்: சுகில முனிவரின் மகனை தஷகன் என்ற பாம்பு தீண்டியதால் “நீ மானுட சர்ப்பமாகக் கடவாய்” என்று சபித்தார். தஷகன் முனிவரிடம் சாப விமோசனம் கோரினான். “பூலோகத்தில் மானுடப் பாம்பாகப் பிறந்து பல ஆலயங்களுக்குச் சென்று வா கடைசியில் விமோசனம் கிடைக்கும்” என்றார். தஷகன் மானுட சர்ப்பமாகப் பிறந்து பல ஆலயங்களுக்கு சென்று இறைவனை பூஜித்தான். கடைசியில் ஒரு மாசி சிவராத்திரியன்று முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யத்தில் (திருநாகேஸ்வரம்) சுயம்புவாக விளங்கும் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி என்கிற திருப்பாம்புரத்தில் உள்ள ஸ்வாமியையம் நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டனத்தில் உள்ள ஸ்வாமியையும் வழிபட்டு சாப நிவர்த்தி கேட்டான். இறைவன் அவனை மீண்டும் “திருநாகேஸ்வரம் வருவாயாக” என்று அழைத்தார். திருநாகேஸ்வரத்தை அடைந்து சாபவிமோசனம் பெற்றான் தஷகன். பொழுது விடிந்து விட்டதால் ஸ்வாமி தஷகனை அங்கேயே தங்கி விடுமாறு கூறினார். தஷகனின் வேண்டுகோளின்படி இறைவன் அன்றுமுதல் திருநாகேஸ்வரர் ஆனார். ஊர் பெயரும் திருநாகேஸ்வரம் ஆயிற்று. சாபம் இங்கு நீங்கியதால்”ராகுதோஷமும் நாகதோஷமும் உடையவர்கள் என்னைத் தேடி வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தால் நான் அவர்களின் குறையைத் தீர்த்து வைக்கிறேன்”என்று சத்தியம் செய்தார். இங்கு ராகு பகவான் இரு தேவிகளான நாகவள்ளி நாககன்னி சகிதம் எழுந்தருளி இருக்கிறார்;. இத்தலத்தில் வழிப்பட்டால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

இராமேஸ்வரம்: திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங்களிலும் ராகு ஈசனை வழிபட்டுள்ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராமபிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

திருப்பாம்புரம்: அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

நாகர்கோவில்:இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

திருச்செங்கோடு: ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேரையூர்:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது. கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன. மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி: புதுக்கோட்டையில் உள்ள புவநேச்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம். ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

ஸ்ரீஅரியநாச்சியம்மன்: சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சியம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

காளிவழிபாடு: மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

பஞ்சமிதிதி: நாகங்களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார். பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதைகளை வணங்கினால் நாகதோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

கோமேதகம்: ராகுபகவானுக்கு விஷேசமான ரத்தினமாகும். இதை மருந்தாக்கி சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடலில் நல்ல பளபளப்பு உண்டாகும். நரம்பு தசை மூட்டுப்பிடிப்பு போன்ற வியாதிகளிலிருந்து குணம் கிடைக்கும். இதை வெள்ளியில் செய்து அணிந்து கொள்வது நல்லது.

நாகலிங்கபூ மந்தாரை மலர்கள் கொண்டு இறைவனை பூஜை செய்வதாலும் அபிஷேகத்தில் பாலில் அபிஷேகம் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்வதாலும் நேவேத்தியத்தில் பொரி தயிர்ஏடு அவியல் வகைகளை நேவேத்தியம் செய்வதாலும் உளுந்து பொருட்களில் செய்யப்பட்ட வடை புளியோதரை போன்ற உணவு வகைகளை நேவேத்தியம் செய்து உண்பதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கம் மரம் போன்ற மரங்களை நடுவதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கமரம் கருங்காலிமரம் செங்கருங்காலி மரம் மருதமரம் கடம்புமரம் போன்றவற்றிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவருவதாலும். ஆடை வகைகளில் நீலம் கருப்பு கருநீலம் கருப்பு கோடுகள் நீலநிற கோடுகள் போன்ற ஆடைகளை அணிவதாலும் ராகுவின் அருள் பெறலாம். ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தென்மேற்கு திசைகளில் வசிக்கலாம்-வீடுகள் கட்டலாம். ராகுதோஷம் நீங்க “அரிம் ஸ்ரீம் நசிமசி” மந்திரம் ஜெபித்தால் ராகுதோஷம் நீங்கும்-மேலும் ராகுவின் காயத்ரி மந்திரமான நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி ! தந்தோ ராஹீ ப்ரசோதயாத்! மந்திரத்தை தினமும் 18 தடவை சொல்லாம். ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் தினமும் சொன்னால் சிறப்பான பலன்களை அடையலாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத்தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும் மேலும் பறக்கும்; பறவைகள் மயில் கருடன் போன்ற பறவைகளுக்கு உணவு இடுதல் ராகு தோஷம் நீங்கும் மேலும் நம்முடைய வலது கையில் நடுவிரல் (பாம்புவிரல்) சிறிது ரத்தம் (ஒரு புள்ளி ரத்தம்) எடுத்து பால் முட்டை ஏதாவது ஒன்றில் கலந்து பாம்பு இருக்கும் புற்றில் வைத்து வணங்கி வந்தால் ராகு தோஷம் நீங்கும் (இது கேரளாவில் மாந்திரிக முறையில் தோஷம் கழிக்கும் முறை) கேரளாவில் உள்ள மக்கள் இதுமாதிரி அதிகம் பேர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதினெட்டு சித்தர்களில் புலிப்பாணி சித்தர் நாகதோஷ பரிகாரம் நீங்க 300 வழிமுறைகள் கூறியுள்ளார். மேலும் புலிப்பாணிசித்தரின் குருவான போகர் சித்தர் வைத்திய நுல்களிலும் ராகுதோஷம் நீங்க வைத்திய முறையில் 47 வகை வழிமுறைகள் கூறியுள்ளார்;. மேலும் பழைய ஜாதக பாரிஜாதம் பலதீபிகை பிருகத் ஜாதகம் பராசர ஹோரை பஞ்ச சித்தாந்தம் நந்தி வாக்கியம் சுகப்பிர்ம்ரிஷி வாக்கியம் நவக்கிரகத்ர்க்கம் சிகாமணிகள் சிந்தாமணிகள் போன்ற பழம்பெரும் நுல்கள் பின்னால் எழுந்த நாரதீயம் ஜாதக (தமிழ்) பாரிஜாதம் ஜாதக சந்திரிகை எனும் நுல்கள் மகாகவி காளிதாஸ் எழுதிய காண்டம் போன்ற அனைத்து நுல்களிலும் பலமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒருவன் பல குரல்களில் (விகடகவி) பேசும் திறன் பல்லாண்டுவரை நீடித்த அரசியலில் நீணடகாலம் இருக்க (தலைவர்கள்) கலைத்துறையில் விதவிதமான வேஷங்கள் (நடிகர்கள்) செய்வதற்கும் (ராகுவிற்கு வேஷகாரன் என்ற சிறப்பு பெயரும் உண்டு) ராகுவின் அருள் வேண்டும். ராகுவைப் போல் கொடுப்பாரில்லை. என்று சொல்லக்கூடிய அந்த ராஜ யோகத்தை வழங்க கூடிய ராகுவை வணங்கி அருள் பெருவோம். வாழ்க வையகம!; வாழ்க வளமுடன்!

உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 9:03:17 AM


சங்காபா காலசர்ப்ப யோகம் ராகு 9வது வீட்டில் இருக்கிறது. கேது 3வது வீடு வீட்டில் இருக்கிறது.



Save customer details psssrf.org.in, Astrology software,



தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது.