பாப கர்த்தாரி யோகம்! தமிழில்: கத்திரி யோகம்! கர்த்தாரி என்னும் வடமொழிச்சொல்லிற்கு வெட்டுக் கத்தி என்று பெயர். அப்படியுள்ள இரண்டு கத்திகளை ஒன்று சேர்த்தால் அது கத்திரிக்கோல் ஆகிவிடும். Kartari (Sanskrit) = chopper பாபகர்த்தாரி யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட யோகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கத்திரிக்குள் (scissors) மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? வெட்டுப்பட்டுப் போகும். வெட்டுப்படுதலில் தீயதும் நடக்கும். நல்லதும் நடக்கும். நல்லதா? ஆமாம் சாமி துணி வெட்டுப்பட்டுதானே நீங்கள் அணிந்து கொள்ளும் சட்டையாக மாறுகிறது? ஆகவே இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு. சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு.
எப்போது உண்டாகும்? இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது ஒருகிரகத்தின் இருபக்கமும் அமர்ந்திருந்தால் அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்! It occurs when malefics enclose a planet or a house. Kartari means scissors, and papa means sin. This is also called hemmed in. This yoga is caused by planets being placed around a certain house and/or planet. The most generally occurring scissors yoga is when two benefics or malefics enclose a planet or a house. பலன்: நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது பலன்கள் அநியாயத்திற்குத் தாமதமாகும்.
உதாரணத்திற்கு, 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனின் திருமணம், தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளிக் கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புக்கள் இல்லாமலிருந்தால், திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும் உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியில்லாமல் இருக்கும். இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம் வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகனுக்கு வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக இருக்கும். இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே அந்த வீட்டிற்கான பலாபலன்கள் கெடும். அவை என்னவென்று சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தைபாக்கியம் இப்படி.....!
இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும்! அது என்ன? ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும். வெட்டுப்பட்ட துணி சட்டையாக உரு மாறுவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்கள்
தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: சனி, செவ்வாய், ராகு, கேது & சூரியன் The malefic planets are Saturn, Mars, Rahu, Ketu and Sun. நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: குரு, சந்திரன், சுக்கிரன் & புதன் The benefic planets are Jupiter, Venus, and Mercury.
உதாரணங்கள்:
1. ரிஷபத்தில் சுக்கிரன். அதன் பின்னால் மேஷத்தில் சனி, அதற்கு முன்னால் மிதுனத்தில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அது ரிஷப வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுக்கும். கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர இயங்க முடியாது. ஜாதகனுக்கு உரிய பலனைத் தரமுடியாது. ஜாதகன் காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது. (கத்திரியைக் கீழே வையுங்கள்: இது பொதுப்பலன்)
2. இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள். ஐந்தாம் வீட்டில் எந்தகிரகமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஜாதகனின் குழந்தைகளைப் பாதிக்கும். அதாவது ஜாதகன் தன்னுடைய குழந்தைகளால் அவதிப் படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான் (எச்சரிக்கை: இதுவும் பொதுப்பலன்)
இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு விட்டால், ஜாதகன் குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால் பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.