|
பால்கனி
கிழக்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய மூன்று திசைகளும் பால்கனி அமைக்க சிறந்த இடமாகும். பால்கனிக்கு மேலே கூரை பகுதியை அமைக்கலாம் அல்லது அமைக்காமல் விட்டுவிடலாம். இதனால் எந்த வாஸ்து பாதிபும் வராது. கிழக்கு பால்கனிக்கு கீழோ அல்லது சாய்வான கூரை பகுதிக்கு அடியிலோ அறை கட்டுவதென்றால் அதைத் தென் கிழக்கில் கட்ட வேண்டும். அந்த அறையின் கதவானது வடக்கு நோக்கி யிருக்கும்படி வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். தெற்கு பால்கனிக்குக் கீழோ அல்லது சாய்வான கூரைபகுதிக்கு அடியலோ அறை கட்டுவதாகயிருந்தால் அந்த அறையை தென்மேற்கில்கட்ட வேண்டும். அறையின் கதவானது கிழக்கு நோக்கிய ஈசானியத்தில் அமைக்க பட வேண்டும். மேற்கு பால்கனிக்குக் கீழோ அல்லது சாய்வான கூரை பகுதிக்கு அடியிலோ அறை கட்டுவதாகயிருந்தால் அந்த அறையை தென் கிழக்கு திசையில் கட்ட வேண்டும் அந்த அறையை வடக்கு நோக்கி வடகிழக்கு மூலையில் அமைக்கலாம். வடக்கு பால்கனிக்கு கீழோ அல்லது சாய்வான கூரை பகுதிக்கு அடியிலோ அறை கட்டுவதாக இருந்தால் அதை வடமேற்கில் கட்ட வேண்டும். அந்த அறையின் கதவானது கிழக்கு நோக்கி ஈசான்யத்தில் அமைக்கபட வேண்டும்.
ஒரு வீட்டில் நான்கு திசைகளிலும் பால்கனி அமைபதினால் எந்தவித வாஸ்து தோஷமும் ஏற்படுவதில்லை. தெற்கு அல்லது மேற்கில் பால்கனி அமைக்கும் போது அதை திறந்த வெளியாக விட்டுவிடக் கூடாது. கண்ணாடி அல்லது திரைச்சீலை அல்லது பிரம்பு பாய் கொண்டு அதை மூடிவைக்க வேண்டும். |