|
ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும். அன்று அதி காலை நீராடி உணவருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆஞ்சநேயருக்குப் பிடித்தமான துளசியால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
காலையில் பொ ரியும், பழமும் மட்டும் உண்ண வேண்டும். மதியம் இரவு பால், பழம், பொரி சாப்பிடுவது நல்லது. அன்று முழுவதும் ஆஞ்சநேயர் புராணம். ராமாயணம் படித்தல் வேண்டும்.
மாலையில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, பொரி, பழம், கற்கண்டு, இளநீர் நிவேதனம் செய்து வணங்குதல் வேண்டும். இவ்விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
பிணக்குகள் நீங்கும். ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது மிகவும் விசேஷம். அவருக்கு வாலில் இருந்து குங்குமப் பொருட்டு வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.
இந்த வழிபாடுகளை பெரி யவர்களிடம் கேட்டு ஐதீகப்படி செய்தால் உரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
|